Show all

டிசம்பர்13 சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு தேர்தல்.

சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு வரும் டிசம்பர் 13-ஆம் தேதி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் நடிகர் நாசர் தலைமையிலான அணி வெற்றி வாகை சூடியுள்ள நிலையில், சின்னத்திரை நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.

சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவராக இருந்த நளினி, செயலாளர் பூவிலங்குமோகன், உள்ளிட்ட நிர்வாகக் குழு ஏற்கெனவே ராஜிநாமா செய்துவிட்ட நிலையில் நடைபெற்ற இந்த பொதுக் குழு கூட்டத்தில் காரசார விவாதங்கள் நடைபெற்றன. பின்னர் புதிய நிர்வாகத்தைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் வேண்டுமா என்பது குறித்து குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்படி வரும் டிசம்பர் 13-ஆம் தேதி சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.