Show all

மோகன்லாலுடன் இணைந்து தெலுங்கு படம் ஒன்றில் கவுதமி.

பாபநாசம் படத்துக்குப் பிறகு மோகன்லாலுடன் இணைந்து தெலுங்கு படம் ஒன்றில் கவுதமி நடிக்க உள்ளார்.

தெலுங்கு இயக்குநரான சந்திரசேகர் எலெதி இயக்கத்தில் உருவாகும் படத்தில் மோகன் லால் - கவுதமி நடிப்பது குறித்த அதிகாரபூர்வமான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தெலுங்கு, தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.

1990ம் ஆண்டு மோகன் லாலும் கவுதமியும் ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா என்கிற மலையாளப் படத்தில் ஒன்றாக நடித்தார்கள்.

நவம்பர் மூன்றாம் வாரத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கும்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.