Show all

ப்ரியங்கா சோப்ராவின் பிரமாண்ட கார் சேகரிப்பு

தனது நடிப்பிற்காக உலக அளவில் எண்ணிக்கையில்லா பல ரசிகர்கள் கூட்டத்தை பெற்றிருக்கும் ப்ரியங்கா, ஒரு கார்கள் ஆர்வலரும் கூட.

ஒரு பாலிவுட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது ரோல்ஸ்-ராய்ஸ் காரில் வந்து இறங்கிய ப்ரியங்காவை பார்த்து இந்திய திரையுலகமே ஆச்சர்யத்தில் ஆழ்ந்தது. அவர் நடிக்கும் படங்கள் போலவே மிகப்பெரிய பட்ஜெட் கொண்ட மாடல்கள் தான் ப்ரியங்காவின் கார் சேகரிப்பாக உள்ளது. இந்திய திரைத்துறையில் ஒரு சில மிகப்பெரும்புள்ளிகள் மட்டுமே ரோல்ஸ் ராய்ஸ் காரை வைத்திருக்கிறார்கள். கதாநாயகி ஒருவர் ரோல்ஸ் ராய்ஸ் காரின் உரிமையாளர் என்றால் அது ப்ரியங்கா சோப்ரா மட்டுமே.

6.6 லிட்டர் ட்வின் டர்போ வி12 எஞ்சினை பெற்றிருக்கும் ப்ரியங்காவின் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் 563 பிஎச்பி பவர் தரும் ஆற்றல் கொண்டது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றிருக்கும் இந்த கார் தொடக்க நிலையில் இருந்து 100கி.மீ வேகத்தை வெறும் 4.7 விநாடிகளிலேயே எட்டி பிடிக்கும். இந்திய மதிப்பில் ரூ. 2.5 கோடி மதிப்புப்பெற்ற இந்த காரை வைத்திருக்கும் ஒரே இந்திய கதாநாயகியாக வலம் வருகிறார் ப்ரியங்கா சோப்ரா. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ் ரோல்ஸ் ராய்ஸிக்கு முன்னதாக ப்ரியங்கா அதிகம் பயன்படுத்தியது மெர்சிடிஸ் நிறுவனத்தின் எஸ்-கிளாஸ் கார் தான். இந்தியாவில் ஆடம்பர கார்களுக்கு தொடக்கமாக உள்ள எஸ் கிளாஸ் இந்திய மதிப்பில் ரூ.1.1 கோடி மதிப்பில் விற்பனை ஆகிறது. போர்ஷே கேயென் எஸ்யூவி ப்ரியங்கா வைத்திருக்கும் முக்கியமான கார் சேகரிப்பில் ஒன்று போர்ஷே கேயென் எஸ்யூவி கார். இதை நிறுத்த அவரது கராஜில் பிரத்யேகமான ஒரு இடமும் உண்டு. இந்தியாவில் ரூ.1 கோடி மதிப்புப்பெறும் இந்த காரில் 3.6 லிட்டர் திறன் பெற்ற எஞ்சின் உள்ளது. இதன்மூலம் 300 பிஎச்பி பவர் மற்றும் 400 என்.எம் டார்க் திறன் கிடைக்கும். கண்ட்ரோல் பட்டன்கள் கொண்ட ஸ்டீயரிங் வீல், ரியர் ஏசி வென்ட்ஸ், நேவிகேஷன் அமைப்பு, ஆப்பிள் கார் பிளே, ரியர் சீட் என்டயர்மென்ட் சிஸ்டம் மற்றும் இதுபோல மேலும் பல அம்சங்கள் ப்ரியங்கா வைத்திருக்கும் இந்த காரில் உள்ளன.

அதிக இடவசதி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு வசதிகளை பெற்றிருக்கும் இந்த காரை ப்ரியங்கா தொலைதூர பயணங்களுக்காக அதிகம் பயன்படுத்துவார்.

ப்ரியங்கா சோப்ரா ரோல்ஸ் ராய்ஸ் வாங்கும் வரை அதிகம் மெர்சிடிஸ் கார்கள் மீது தான் விருப்பம் கொண்டு இருந்தார். அப்படி திரையுலகில் நுழைந்த போது அவர் வாங்கிய கார்களில் ஒன்று தான் மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ். எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் ரூ.50 லட்சம் மதிப்புப்பெற்ற இந்த காரில் அதிக உயர் ரக தோல்கள் இருக்கைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏர்பேகுகள் உட்பட பல தரப்பட்ட மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை இந்த கார் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக ப்ரியங்காவின் கார் சேகரிப்பை நிறைவு செய்யும் விதத்தில் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது பிஎம்டபுள்யூ 7 சிரீஸ். இந்தியாவில் மாடலுக்கு ஏற்றவாறு ரூ.1.1 முதல் 1.95 கோடி வரை மதிப்புப்பெறும் இந்த கார், பல்வேறு ஆடம்பர மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகள் கொண்டது. ரோல்ஸ்-ராய்ஸ், பிஎம்டபுள்யூ, மெர்சிடிஸ் போன்ற ஆடம்பரமான கார்களுக்கு மத்தியில் ப்ரியங்கா சோப்ரா இருசக்கர வகான துறையில் அரசனாக விளங்கும் ஹார்லி டேவிட்சன் பைக் ஒன்றையும் சொந்தமாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.