Show all

நோட்டா படத்தில் வலுவான சிறிய பாத்திரத்தில் நடித்துள்ளார்! இப்போது பிரபலமாகி விட்ட பிக்பாஸ் யாசிகா

18,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிக்பாஸ் வீட்டுக்குள்  கிட்டத்தட்ட 99 நாட்கள் இருந்த யாசிகா, நாளை வெளியாகவிருக்கும் நோட்டா படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார். இதில் விஜய் தேவரகொண்டா மற்றும் மெகரீன் பிர்சாடா முதன்மை வேடத்தில் நடிக்கின்றனர். பிக் பாஸ் மூலம் பிரபலமாகி விட்;டதனால் யாசிக அந்தப் படத்தில் தனித்துப் பார்க்கப் படுவார். கொஞ்சாமாவது சிறப்புக் காட்டியிருந்தாலே அவருக்கு பாராட்டு கிடைக்கும்.

இதுகுறித்து யாஷிகா கூறும்போது, பிக் பாஸ் வீட்ல  இருந்து வெளிய வந்தவுடனேயே நிறைய திரைப்பட வாய்ப்புகள் வந்துச்சு. ஆனா, நான் அவசரப்பட்டு எந்தவொரு படத்துலயும் சிக்கிடாம, பொறுமையா கதைகள் மட்டும் கேட்டுக்கிட்டு இருக்கேன். விஜய் தேவரகொண்டா நடிக்கிற, நோட்டா படத்துல நான் பிக்பாசுக்கு முன்னாடியே நடித்து விட்டேன். இதுல என்னோட கதாபாத்திரம் அரை மணி நேரம் திரையில வந்துபோகுற மாதிரியான கதாபாத்திரம். ஆனா, நான் பிக் பாஸ்ல இருந்ததுனால படப்பிடிப்புக்கு போக முடியலை. அதனால என்னோட கதாபாத்திரத்தை சின்ன கதைப்பாத்திரமாக மாத்திட்டாங்க. 

அரசியல் மூலமா நம்ம நாட்டுக்கு என்ன தேவையோ, அதைச் செய்யணும், அது இல்லாம அதை பணம் சம்பாதிக்கிறதுக்கான ஒரு வியாபாரமா மாத்திட்டாங்க. இப்போ இருக்கும் அரசியல்வாதிகள். இதையெல்லாம் எடுத்துச் சொல்ற மாதிரியான ஒரு கதாபாத்திரம்தான் என்னோடது என்று கூறினார். கவலை வேண்டாம் யாசிகா நல்ல எதிர்காலம் அமையும் உங்களுக்கு.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,930.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.