Show all

அதாகப்பட்டது மகாஜனங்களே படத்தின் தலைவி கூடுதல் பந்தாவாம்

அதாகப்பட்டது மகாஜனங்களே படத்தின் தலைவி பந்தா காட்டுகிறாராம். தம்பி ராமையாவின் மகன் உமாபதி தீரராக நடித்துள்ள படம் அதாகப்பட்டது மகாஜனங்களே. இந்தப் படம் மூலம் உமாபதி தீரராகியுள்ளார். படத்தில் அவருக்கு இணையாக ரேஷ்மா ரத்தோர் நடித்துள்ளார். ரேஷ்மாவின் முதல் தமிழ் படம் இது தான். 

     ஹைதராபாத்தை சேர்ந்த ரேஷ்மா தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளார். சந்தை இல்லாத நிலையில் தான் தமிழுக்கு வந்துள்ளார்.

     முதல் படத்திலேயே ரேஷ்மா கெட்டப் பெயர் எடுத்துள்ளார். படபிடிப்;பின் போது பந்தா செய்து இயக்குனருக்கு மனஉளைச்சல் ஏற்பட வைத்தாராம்.

ஒரு உடையை கொடுத்து அணிய சொன்னால் இது எல்லாம் போட மாட்டேன் எனக்கு பிடித்த உடை தான் அணிவேன் என்று இயக்குனரை பாடாய் படுத்தினாராம்.

     ரேஷ்மாவின் நச்சரிப்பைத் தாங்கிக் கொண்டு படப்பிடிப்பை நடத்தி முடித்தார்களாம். படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு அழைத்தால் நயன்தாரா மாதிரியே நான் வர மாட்டேன் என்று கூறி வரவே இல்லையாம். ரேஷ்மாவின் சேட்டை பற்றி தான் தமிழ்த் திரைஉலகில்; பேச்சாக கிடக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.