Show all

90வது ஆஸ்கர்விருது வழங்கும் விழா! லாஸ் ஏஞ்சல்சில், கொட்டும் மழையில், இன்று கோலாகலமாகத் தொடங்கியது

21,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கியது. உலகில் எத்தனையோ திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டாலும், அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுக்குத்தான் இன்று வரை பெரும் மதிப்பும் எதிர்ப்பார்ப்பும் உள்ளது.  ஆஸ்கர் விருதுகளுக்கு இது 90வது ஆண்டு. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொட்டும் மழைக்கு நடுவில் இன்று கோலாகலமாகத் தொடங்கியது ஆஸ்கர் விருது வழங்கும் விழா. இன்றைய விழாவை அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்ச நகைச்சுவை நடிகர் ஜிம்மி கெம்மல் தொகுத்து வழங்குகிறார். வழக்கமாக நடக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பு நிகழ்ச்சி சற்று முன் தொடங்கியது. இதில் சர்வதேச பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது 

90 ஆண்டு ஆஸ்கர் விருது சரித்திரத்தில் முதல் முறையாக ஒரு பெண் ஒளிப்பதிவாளர் பெயர் இந்த ஆண்டுதான் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,717.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.