Show all

60 வயது மாநிறம்

16,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ்த் திரையுலகில் பல வெற்றிப் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது

இந்த படத்திற்கு, 60 வயது மாநிறம் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பிரகாஷ்ராஜ், விக்ரம்பிரபு மற்றும் சமுத்திரக்கனி முதன்மை வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் இந்துஜா, குமரவேல், சரத், மதுமிதா, மோகன்ராம், அருள்ஜோதி, பரத் ரேட்டி உள்பட பலர் நடிக்கவுள்ளனர்.

இசைஞானி இளையராஜா இசையில் விவேக் ஆனந்த் ஒளிப்பதிவில் விஜி வசனத்தில் ஜெய் படத்தொகுப்பில் உருவாகும் இந்தப் படத்தை ராதாமோகன் இயக்கவுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,866.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.