Show all

கோள்கள் நம் தலைக்கு மேலே தெரிவது எதனால்?

புவியில் இருந்து மேல் நோக்கி பார்க்கும் போது- ஞாயிறு, நிலா, மற்றும் நாள்மீன்கள் நம் தலைக்கு மேலே தெரிவது எதனால்? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்ட வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

19,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5125: 

1. முதலெனப்படுவது இடமும் காலமும் என்று நிறுவியுள்ளனர் தமிழ்முன்னோர்.

2. எல்லையில்லாத, சொந்தஇயக்கம் இல்லாத வெளியே இடம்.

3. வெளியில் முதலாவதாக இருந்தவை: நீங்கள் ஐரோப்பிய இயல்அறிவில் (சயின்ஸ்) அறிந்த ஒருநேர் (எலக்ட்ரான்), ஒரு நிரை (புரட்டான்) உள்ள நீர்வளியின் அணுவைவிட அந்த அணுவில் உள்ள நேர் அல்லது நிரையை விட நுட்பமான தனிஒன்றுகள்.

4. தனிஒன்றுகளுக்கு எல்லை உண்டு. சொந்த இயக்கம் உண்டு. குறிப்பிட்ட எண்ணிக்கையும் உண்டு.

5. எல்லா தனிஒன்றுகளும் தன்னைத்தானே மட்டும் சுற்றிக் கொண்டிருந்தன. 

6. தனி ஒன்றுகளின் பொருந்து முகத்தில் அமைந்த எதிர்இயக்கம் காரணம் பற்றி தனிஒன்றுகள் இரண்டு, நான்கு எட்டு பதினாறு என்று பல்வேறு எண்ணிக்கைகளில் இணைந்து நிலம், நீர், தீ, காற்று என்கிற நாற்திர ஆற்றல்கள் உருவாகின.

7. நாற்திரங்களின் அடுத்த நிலையாக பல்வேறு கோள்கள் உருவாகின.

8. அந்தக் கோள்களில் ஒன்றான புவியில் குமரிக்கடலில் நீர்வாழ் உயிரிகளும் இமயமலையில் நிலவாழ் உயிரிகளும் தோற்றம் பெற்றன.

9. நிலவாழ் உயிரிகளில் ஓரறிவு உயிரி புல்; முதல், ஆறாறிவு மனிதன் வரையிலான உயிரிகள் அடக்கம்.

10. அந்த நிலவாழ் உயிரிகளில் விலங்குகளும் மனிதர்களும் வலமாகவும் இடமாகவும் விரிவாகப் பரவினர்.

11. வலமாகப் பரவிய மனிதர்கள் தங்கள் மண்ணுக்கு நாவலந்தேயம் என்று பெயரிட்டு தமிழ் என்கிற ஒரு மொழியையும் நிறுவினர்கள். அந்தத் தமிழர்களில் தற்போது தமிழக்கோராவில் வினாவிட்டும் விடையிட்டும் உறவாடிக் கொண்டிருப்பவர்கள் நீங்களும் நானும்.

12. ஞாயிற்றையும், நிலாவையும், நாள்மீன்களையும் மேல்நோக்கிப் பார்த்தே அறிகிறோம் நீங்களும் நானும். 

13. நம் இருவருக்கும் கீழே இருப்பது புவித்தரையே. நீங்கள் இருக்கும் புவிப்பகுதியின் நேர் எதிரில் நான் இருக்கிறேன் என்று வைத்துக் கொண்டால், நம் இருவருக்குமே அவரவர் இருக்கும் புவிப்பகுதிதான் கீழ். வெளி மேல். 

14. நீங்கள் உங்கள் புவிப்பகுதி வெளியில் (இடம்) நிலாவையும், நாள்மீன்களையும் பார்க்க முடிகிறது என்றால், நான் என் புவிப்பகுதி வெளியில் ஞாயிற்றைப் பார்க்க முடியும்.

15. என் காலடி மீது நீங்கள் நின்றிருப்பீர்கள். நான் உங்கள் காலடியின் மீது நின்றிருப்பேன். இடையில் புவிஉருண்டை. இதில் ஒருவருக்கு ஒருவர் தலைகீழாக இருப்பதாக இருவரும் உணர முடியாது. 

16. வெளி என்கிற இடத்திற்கு இயக்கம், எல்லை, திசை, எதுவும் கிடையாது. 

17. நாம் நிற்கிற புவிப்பகுதியே நமக்கு இயக்கம் எல்லை, திசை  அனைத்தையும் உணர்த்த முடியும்.

18. வெளி என்கிற இடம் காலம் என்கிற நாம் இயங்கும் தளமாக அமைந்து, நம் இயக்கத்தால் இயக்கம்பெற்று நம்மிடம் இருந்து பெற்ற இயக்க வகைக்கு நம்மை முயக்குகிறது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,936.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.