Show all

அறிவின் மீது ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்!

'அறிதொறும் அறிதொறும் அறியாமை கண்டற்றால்' என்பதில் எந்த அறிதலும் இறுதியானது அல்ல. புதிய அறிதல் முன்னதை அறியாமை ஆக்கும் என்பதே இறுதியானது என்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே திருக்குறள் கொண்டாடும் வகைக்கு நம் தமிழ்முன்னோர் அறிவின் மீது தொடர்ந்து ஓடி இருந்திருக்கின்றனர். என்பதை தமிழ்மக்களுக்கு நினைவூட்டுவதற்கானது இந்தக் கட்டுரை.

11,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5125. 

பயணத்தில், மழை வந்தால் அருகில் உள்ள வீட்டில் ஒதுங்க வேண்டும். வெயில் அடித்தால் மரத்தடியில் ஒதுங்க வேண்டும். பசியெடுத்தால் சாப்பிட வேண்டும்.

நடை பயணத்தில் மழை வந்தால் குடை பிடிக்க வேண்டும். துள்ளுந்து பயணத்தில் மழை வந்தால் மழையங்கி அணிய வேண்டும். வெயில் அடித்தால் குளிர்கருவி பொருத்தப்பட்ட தேரில் பயணிக்க வேண்டும். பசியெடுத்தால் இயங்கலையில் பிடித்த உணவைக் கேட்பு செய்ய வேண்டும்.   

மழை வந்தால் மகிழ்ச்சியில் நனைய வேண்டும். வெயில் வந்தால் மேலாடையைக் கழட்டி விட்டு நடக்க வேண்டும். பசி வந்தால் மரபு சார்ந்த உணவு சாப்பிட வேண்டும். 

காலத்திற்கு காலம் விடைகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. காரணம்: நாம் அறிவின் மீது ஓடிக்கொண்டே இருக்கிறோம். அறிவின் மீதே ஓடிக்கொண்டே இருப்பதே அறிவும், வளர்ச்சியும் ஆகும்.

'அறிதொறும் அறிதொறும் அறியாமை கண்டற்றால்' என்பதில் எந்த அறிதலும் இறுதியானது அல்ல. புதிய அறிதல் முன்னதை அறியாமை ஆக்கும் என்பதே இறுதியானது என்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே திருக்குறள் கொண்டாடும் வகைக்கு நம் தமிழ்முன்னோர் அறிவின் மீது தொடர்ந்து ஓடி இருந்திருக்கின்றனர்.

எந்த மொழிச் செய்தியையும் தற்பரை நேரத்தில் இன்னொரு மொழிக்கு மாற்றித் தருகிற கூகுள் மொழிபெயர்ப்பு காலத்தில் இந்தியாவில் இருக்கிற அத்தனை மொழி மாந்தரின் கல்வியிலும் ஹிந்தி கட்டாயம் என்கின்றனர், ஒன்றியத்தில் நேற்றைக்கு ஆண்ட காங்கிரசும் இன்றைக்கு ஆளுகிற பாஜக முட்டாள்களும்.

முட்டாள்கள் அறிவு அற்றவர்கள் அல்ல அறிவின் மீது முடங்கிவிடுகிறவர்கள் என்கிறது தமிழ்.

இந்த முடக்கம் ஒட்டு மொத்த இந்தியாவும் அறிவின் மீது ஓடுவதைத் தடை செய்கிறது.

இந்திய விடுதலை பெற்ற போது ஒரு அமெரிக்க டாலருக்கு இணையாக இருந்தது இந்திய ஒரு ரூபாய்.
இன்றைக்கு ஒரு அமெரிக்க டாலருக்கு நாம் 83.40 இந்திய ரூபாயைக் கொடுக்க வேண்டும்.

வருமான வரி என்கிற தலைப்பில் அன்றையிலிருந்து இன்று வரை நாம் வருமானம் ஈட்டுவதற்கான தடை எல்லை பத்து இலட்சம் இருபது இலட்சம் என்றோ, வருமான வரியே கிடையாது என்றோ அறிவின் மீது ஓட மறுக்கின்றனர் ஒன்றியத்தில் நேற்றைக்கு ஆண்ட காங்கிரசும் இன்றைக்கு ஆளுகிற பாஜக முட்டாள்களும்.

கேள்வி கேட்டால் விடை சொல்ல வேண்டும். அதே வினாவை இன்னொருவர் கேட்டால் முதல் விடையை விட இரண்டாவது விடை மேம்பட்டிருக்க வேண்டும். என்கிற அளவுக்கு நாம் அறிவில் வளர்ந்து கொண்டே போக முடியும். போக வேண்டும் என்பதற்காகவே தம்மின் தம் மக்கள் அறிவுடைமையை கொண்டாடும் இயலாக தமிழியலை முன்னெடுத்தனர் தமிழ்முன்னோர்.

ஒன்றியத்தில் நேற்றைக்கு ஆண்ட காங்கிரசும் இன்றைக்கு ஆளுகிற பாஜக முட்டாள்களும் இதை எப்போதும் புரிந்து கொள்ள மாட்டார்கள். வட இந்திய மக்களும் அவர்களை அப்புறப்படுத்தும் வகைக்கு அறிவின் மீது ஓட மாட்டார்கள்.

தமிழ்நாட்டில் இருந்துதான் இதற்கான விடிவெள்ளி முளைக்க வேண்டும். முயல்வோமா?
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,810.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.