Show all

வாளாண்மை, தாளாண்மை, வேளாண்மை- பொருள் தெரிந்தவர்கள் விளக்கவும்

வாளாண்மை, தாளாண்மை, வேளாண்மை- பொருள் தெரிந்தவர்கள் விளக்கவும் என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

15,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5125. 

வினாவில் உள்ள- வாளாண்மை, தாளாண்மை, வேளாண்மை என்கிற சொற்களை உள்ளடக்கி வேளாண்மையில் முன்னெடுக்க ;வேண்டிய தாளாண்மை குறித்து தெளிவு படுத்தி, தளாண்மையை கைவிடுவது பேடிகையான செயல் என்று தெரிவிக்கிறார் திருவள்ளுவர்.
நகராக்குகிறோம், சாலைபோடுகிறோம் என்று வேளாண்மையை அழித்துக் கொண்டிருக்கிற நாம், மரங்களை வேரோடு அழிக்கிற கலாச்சாரத்தில் சிறந்த விளங்குகிறோம். இந்தக் குறள் நம்மை வெட்கித் தலைகவிழச் சொல்கிறது. 
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.

இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இந்தக் குறளில் வருகிற தாளாண்மைக்கு விடாமுயற்சி என்று பொருள் எழுதிக் கொண்டிருக்கின்றனர். ஆய்வுக்குக்கூட வேளாண்மை பக்கம் ஒதுங்காத புலவர் பெருமக்கள்.

அன்றைக்கு குயவர்கள் உழவர்கள் என்று ஏதொவொரு தொழில் ஆற்றியவர்கள்தாம் புலவர்களாக இருந்தார்கள். அதனால் திருவள்ளுவரால் இப்படி எழுத முடிந்ததில் திருவள்ளுவரும் ஏதொவொரு தொழிலில் இருந்தவர் என்று நிறுவவும் நமக்கு தரவு ஆகிறது இந்தக் குறள்.

விடாமுயற்சி என்று பொருள் எழுதும் வகைக்கு எந்தப் உழவனைப் பார்த்திருக்கிறார்கள் இந்தப் புலவர்கள்? நடப்பில் கூட, அப்படியான விடாமுயற்சி இல்லாத, விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டிய, உழவர்களைத் தமிழ்நாடு முழுவதும் எங்கும் பார்க்க முடியாதே!

அடி காட்டுக்கு நுனி வீட்டுக்கு நடு மாட்டுக்கு என்பது தமிழினத்தின் வேளாண்மை சார்ந்த பழமொழி. விளைந்த விளைச்சலை ஒருபோதும் அடியோடு பிடுங்காது தமிழினம். 

அடியை காட்டுக்கே விட்டுவிடுவதுதான் தாளாண்மை. அடியை அப்படியே காட்டில் பிடுங்காமல் விட்டு, நீர்பாய்ச்சி உழவு ஓட்டுவதுதான் தாளாண்மை.

வேளாண்மை என்பது உழவு என்பதை யாரும் தவறாகப் பொருள் கொள்வது இல்லை. மாறாக வேளாண்மை என்கிற பொருள் பொதிந்த தமிழ்ச்சொல் விடுத்து விவசாயம் என்கிற சமஸ்கிருதச் சொல்லை கொண்டாடுவோர் நிறையவே உண்டு.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,814.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.