Show all

தமிழ்த்தொடராண்டு 5126 எப்படி இருக்கும்?

தமிழ்த்தொடராண்டு 5126 பிறந்துள்ளது. தமிழ்ப் புத்தாண்டு ஐயாயிரத்து நூற்று இருபத்தியாறில் உலகளாவிய தமிழ்மக்கள் கணியக்கலை அடிப்படையில், எதில் சாதிக்கலாம்? எப்படி சாதிக்கலாம்? என்று விளக்;குவதற்கானது இந்தக் கட்டுரை.

01,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5126:

குமரிக் கண்டம் முதல் இமயம் வரை தமிழர் தாராளமாக தாம் புழங்கி வந்த பகுதியை நாவலந்தேயம் என்று அழைத்தனர் தமிழ்முன்னோர்.

இன்று பிறந்திருக்கிறது தமிழ்த்தொடர் ஆண்டு 5126. ஐயாயிரத்து நூற்றி இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னேமே ஓர் ஆண்டுக்கு 365 நாள் 15 நாழிகை 31 விநாழிகை 15தற்பரை என்று ஆண்டுக் கணக்கைத் தெளிவாக நிறுவியிருந்தனர் தமிழ்முன்னோர்.

தமிழ் மாதங்களுக்கும் மிக மிக நுட்பமான தற்பரை வரைக்குமான நேரத்தை கணித்திருந்தனர் தமிழ்முன்னோர். சித்திரை தொடங்கி மாசி வரைக்குமான மாதங்களுக்கு நாளும், நாழிகையும், விநாழிகையும் உண்டு. பங்குனி மாதத்திற்கு நாள், நாழிகை, விநாழிகையோடு தற்பரைக் கணக்கும் உண்டு.
 
1. சித்திரைக்கு நாட்கள்    30, நாழிகை 55, விநாழிகை 32.
2 வைகாசிக்கு    நாட்கள் 31, நாழிகை 24, விநாழிகை 12.
3 ஆனிக்கு நாட்கள் 31, நாழிகை 36, விநாழிகை 38.
4 ஆடிக்கு நாட்கள் 31, நாழிகை 28, விநாழிகை 12.
5 ஆவணிக்கு நாட்கள் 31, நாழிகை 02, விநாழிகை 10.
6 புரட்டாசிக்கு நாட்கள் 30, நாழிகை 27, விநாழிகை 22.
7 ஐப்பசிக்கு நாட்கள் 29, நாழிகை 54, விநாழிகை 07.
8 கார்த்திகைக்கு நாட்கள் 29, நாழிகை 30, விநாழிகை 24.
9 மார்கழிக்கு நாட்கள் 29, நாழிகை 20, விநாழிகை 53.
10 தைக்கு நாட்கள் 29, நாழிகை 27, விநாழிகை 16.
11 மாசிக்கு நாட்கள் 29, நாழிகை 48, விநாழிகை 24.
12 பங்குனிக்கு நாட்கள் 30, நாழிகை 20, விநாழிகை 21 தற்பரை 15. 

ஐயாயிரத்து நூற்று இருபத்தி நான்கு ஆண்டுகளாகவும் இதே கணக்கில் தொடர்கிறது தமிழ்ஆண்டு. 

தமிழ்முன்னோர் முன்னெடுத்த முதலாவது முன்னேற்றக்கலை நிமித்தகம் என்கிற இந்தக் காலக்கணக்கு. 

இந்தக் காலக்கணக்கு அடிப்டையில்தான் இன்று பிறந்திருப்பது 5126வது தொடர் ஆண்டு என்று கொண்டாடுகிறோம்.

தமிழ்முன்னோர் முன்னெடுத்த இரண்டாவது முன்னேற்றக்கலை கணியத்தின் அடிப்படையில் இந்த ஆண்டின் இயல்பு எண் ஐந்து.
அடிப்படை இயல்பு: கலை.
மாற்றம், போக்குவரத்து, நடுநிலை, அழகியல் போன்றவையும் ஐந்துக்கான இயல்புகளே.

அந்த வகையில் இந்த ஆண்டில் உலகமும், நமது நாவலந்தேயமும், தமிழ்நாடும்- கலை, மாற்றம், போக்குவரத்து, நடுநிலை, அழகியல் போன்ற ஐந்துக்கான இயல்புகளைச் சிறப்பாகக் கொண்டாடியிருக்கும்.

இந்த புவிக் கோளத்தில், நேரடியாக கலையிலும், கலை சார்ந்த துறைகளிலும், எல்லத்துறைகளிலும் கலைப்பாடாக இயங்குகிறவர்களின் முன்னெடுப்பிலும் நடப்புத் தமிழ்த்தொடராண்டு 5126ன் ஒத்துழைப்பு பேரளவாகவும், சிறப்பாகவும் உறுதியாக அமையும். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,949.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.