Show all

நீங்கள், எதை மதிப்பு மிக்கதாக கருதுகிறீர்கள்? அப்படியான ஒன்று உலக அளவில் எம்மாதிரியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது?

இங்கு நீங்கள், எதை மதிப்பு மிக்கதாக கருதுகிறீர்கள்? அப்படியான அந்த ஒன்று உலக அளவில் எம்மாதிரியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது? இதனைத் தவிர்த்து இந்த உலகத்தில் மனித குலத்திற்கு உயர்வை அதாவது அனைத்து கொடுப்பினைகளையும் கொடுக்கின்ற மதிப்புமிக்க ஒன்று எது? என்று வேறு ஒரு தளத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

21,மாசி,தமிழ்த்தொடராண்டு-5124: இந்த உலகில் மதிப்பு மிக்க ஒன்றாக நான் கருதுவது என் தமிழே! 

எனக்கு தமிழ் என்பது போல, உலகினர் ஒவ்வொருவருக்கும் அவர்களது எண்ண மொழியே மதிப்பு மிக்கதும் கொண்டாடத் தக்கதும் ஆகும்.

அப்படியான ஒன்றான உலகினரின் எண்ணமொழி, மதிப்பு மிக்கதாகக் கொண்டாடப்பட்டே வருகிறது. 

ஆனால் உலகின் எந்த மொழியும் தோற்றிய காலந்தொட்டு இன்று வரை கொண்டாடப்பட்டதான தரவு இல்லை. ஏனெனில்; உலகில் இன்று மதிப்பு மிக்கதாக கொண்டாடப்படுகிற அத்தனை மொழிகளும் மூலமொழி அல்லாத கிளை மொழிகளாகவே இருந்து வருகின்றன. 

நடப்பு நிலை கிளை மொழிகளைத்தாம் உலகினர் பேரளவாகக் கொண்டாடுகிற விழிப்பு பெற்றுள்ளனர். இந்த விழிப்பு உலகினருக்கு தமிழர் வழங்கிய கொடை ஆகும்.

இந்த வரலாற்றுக்கு விதிவிலக்காக என்னுடைய தமிழ் நீண்ட நெடுங்காலமாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகில் உள்ள மொழிகளில் நடப்பு தமிழின் மூலமொழி மட்டுமே தமிழாகவே இருக்கிறது. 

இன்னும் சிறப்பாக சொல்ல வேண்டியதும் உள்ளது. இயற்றமிழ் மொழிக்கு முந்தைய சிந்தனை மொழியான தமிழ், இசைத்தமிழ் என்று கொண்டாடப்பட்டது. அதற்கும் முந்தையதான உடலசைவு மொழி தமிழ், நாடகத்தமிழாகக் கொண்டாடப்பட்டது இதனால் தமிழ் மட்டுமே உடலசைவு மொழியிலிருந்து தொடங்கி இயற்றமிழ் வரையிலாகப் படிப்படியாக வளர்ந்;து வருகிற முத்தமிழ் என்று கொண்டாடப்படுவதாகிறது.

நாம் கடவுளில் இயக்கம் கொடுத்து கடவுளின் முயக்கதால் உலகின் அனைத்தோடும் ஒருங்கிணைக்கப்பட்டு இயங்கி வருகிறோம். இந்த வகைக்கு கடவுளுக்கு முதலாவதாக கொடுக்கப்பட்ட மொழி தமிழே ஆகும்.

நாம் ஒவ்வொரு தற்பரை நேரமும் செயலாலும், எண்ணத்தாலும், மொழியாலும் கடவுளில் இயங்கி, கடவுளின் முயக்கதால் உலகின் அனைத்தோடும் ஒருங்கிணைக்கப்பட்டு இயங்கி வருகிறோம். அதாவது நம்முடைய தலைஎழுத்தை நாமே எழுதிக் கொள்கிறோம் என்று தமிழ்முன்னோர் நிறுவிய மூன்றாவது முன்னேற்றக் கலை மந்திரம் பேசுகிறது.

ஆகவே நம்முடைய தமிழைத் தவிர்த்து நமக்கும், உலகினரின் எண்ணமொழியைத் தவிர்த்து இந்த உலகத்தில் மனித குலத்திற்கு உயர்வை அதாவது அனைத்து கொடுப்பினைகளையும் கொடுக்கின்ற மதிப்புமிக்க ஒன்று வேறு எதுவும் இல்லை இல்லை என்று அறுதியிட்டு கூற முடியும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,543.
 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.