Show all

சோதியுங்கள்! கடவுள் அழைப்பு உங்களை வந்தடையா வகைக்கு, அழைப்பு திசைதிருப்பல் பயன்முறையில் உள்ளீர்களா?

நீங்கள் செயலாலும், எண்ணத்தாலும் சரியாக இருப்பதாக உங்களுக்குத் தோன்றுகிறது. ஆனாலும் நீங்கள் உங்களுக்காக கடவுளிடம் கேட்கிற கேட்புகள், கடவுளால் நிறைவேற்றித் தரப்படவில்லை என்பதாக நீங்கள் உணர்ந்தால்- நீங்கள் சோதிக்க வேண்டியது ஒன்று உண்டு. அது கடவுள் அழைப்பு உங்களை வந்தடையா வகைக்கு அழைப்பு திசைதிருப்பல் பயன்முறையில் உள்ளீர்களா? என்று அறிந்து நேர்செய்வது ஆகும். அந்த வகைமைக்கானது இந்தக் கட்டுரை.

14,தை,தமிழ்த்தொடராண்டு-5124: நான் கயல்விழி பேசுகிறேன்: நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது என் அப்பாவிடம் ஒரு செல்பேசி வாங்கித்தருமாறு கேட்டேன். 

அப்பா நெடிய யோசித்துவிட்டு, அம்மாவிடம் கலந்துபேசி, நோக்கியோ பித்தான் பயன்முறை செல்பேசி ஒன்றை வாங்கிக் கொடுத்தார். இன்றைக்குப் பயன்பாட்டிற்கு வந்துவிட்ட மிடுக்குப்பேசிகள் எல்லாம் சந்தைக்கு வராத காலம் அது.

அந்தப் பேசியில் நான் யாரோடும் பேசமுடியும். ஆனால் என்னோடு யாரும் பேச முடியாது. இந்த வகை பயன்முறையை இயக்கி அந்தப் பேசியை எனக்கு என் பெற்றோர் வழங்கியிருப்பது எனக்கு நீண்ட காலம் தெரியாது இருந்தது.

ஒரு முறை என் தமிழாசிரியர் இமயவரம்பன் ஐயா அவர்கள், நாம் ஏன் தமிழ்ப்பெயரையே நமக்குச் சூட்டிக் கொள்ள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.

நான் இமயவரம்பன் பேசுகிறேன்: பிள்ளைகளே! நாம் நமக்குச் சூட்டிக் கொள்கிற பெயரை ஏனோதானோ என்று எண்ணிவிடாதீர்கள். கணியன் பூங்குன்றனாரை உங்களுக்குத் தெரிந்திருக்கும். காரணம்- அவர் எழுதிய புறநானூற்றுப் பாடலில், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்கிற முதலடியில் ஒட்டுமொத்த உலகையே உறவாக்கும் சிந்தனை. 

ஆனால் அவருக்குப் பெயரடையாக முன்னெடுக்கப்பட்ட கணியம் குறித்து யாருக்கும் தெரியாது. இன்று வரை தமிழ்அறிஞர்கள் யாரும் தெரிந்து கொள்ளவும் முயலவில்லை.

அந்தக் கணியம் என்பது, நம் அடையாளத்தை, நாம் விரும்புகிற இயல்புக்கு, நம்மை கடவுளிடம் அடையாளப்படுத்திக் கொள்வது எப்படி என்பதற்கான கலை ஆகும். 

நமக்கு நாம் சூட்டிக் கொள்கிற பெயர்தான் நம்மை கடவுளிடம் பதிவு செய்து கொள்கிற அடையாளம். நம்முடைய வகுப்பில் அழகான தமிழ்ப்பெயரைச் சூட்டிக் கொண்டுள்ள ஒரு மாணவி கயல்விழி. கயல்விழி என்கிற பெயருக்கான இயல்பு பயணம். இயல்பு எண் நான்கு. 

இது அவர்களுடைய பெற்றோர்களுக்குத் தெரிந்துதான் இந்தப் பெயரைச் சூட்டினார்களா? கயல்விழியைத்தான் கேட்க வேண்டும். கயல்விழி நான் கேட்பது புரிகிறதா?

நான் கயல்விழி பேசுகிறேன்: புரிகிறது ஐயா. நீங்கள் சொல்லுகிற செய்திகள் வியப்பைத் தருகின்றன. இப்படியான செய்திகளை என் பெற்றோர் என்னிடம் பகிர்ந்து கொள்ளவில்லை. தமிழ் ஆர்வத்தின் காரணமாக என் பெற்றோர் எனக்கு கயல்விழி என்று பெயர் சூட்டியுள்ளனர். அந்தப் பெயருக்குள் இருக்கிற கணியக்கலை நுட்பம் அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை. கடவுள், தெய்வம் எல்லாம் மூடநம்பிக்கை என்றே பேசுவார் என் தந்தை.

நான் இமயவரம்பன் பேசுகிறேன்: கயல்விழி! கடவுள், இறை, தெய்வம் என்பன பொருள் பொதிந்த தமிழ்ச்சொற்கள். அவைகளுக்கான விளக்கம் குறித்து பின்னொரு நாளில் பேசுவோம். இன்றைக்கு நாம் பேச வந்தது, நமக்கு நாம் சூட்டிக் கொள்கிற பெயர்தான் நம்மை கடவுளிடம் பதிவு செய்து கொள்கிற அடையாளம் என்கிற தலைப்பு குறித்தேயாகும்.

கயல்விழி என்கிற பெயரை உன் பெற்றோர் உனது அடையாளமாக பதிவு செய்துள்ளனர். இது தன்னியக்கமாக கடவுளிடமும் பதிவாகி விடுகிறது. நீ, உன்செயல், உன்எண்ணம், உன்தமிழ் (எண்ணமொழி) வழியாக முன்னெடுக்கிற அனைத்தும் ஒவ்வொரு வினாழியும் கடவுளிடம் பதிவாகிறது என்று விளக்குகிறது தமிழ்முன்னோரின் மூன்றாவது முன்னேற்றக் கலையான மந்திரம். 

சோதிடம், சாதகம் என்கிற நிமித்தகம், தமிழ்முன்னோர் முன்னெடுத்த முதலாவது முன்னேற்றக் கலையாகும். கணியம் இரண்டாவது முன்னேற்றக்கலை.

இது வரை உனக்கு நடந்திருக்கிற அனைத்தும் நீ கடவுளிடம் செயல், எண்ணம், தமிழ் (எண்ணமொழி) வழியாகக் கேட்டது மட்டுமே. 

நீ கேட்டதை கடவுள் உனக்கு நிறைவேற்றித்தர சில வேலைகளை உன்னிடம் கேட்கும். அதற்கு உன்பெயர், உன்தமிழ் (எண்ணமொழி) உன்ஆறாவது புலன் மனம் மூன்றும் கடவுளுக்கு நேர்கோட்டில் வரவேண்டும்.

உன்னுடைய பெயர் கயல்விழி சரி. கயல்விழி என்கிற பெயர் முன்னெடுக்கும் எண்ணமொழி தமிழ் சரி. உன்ஆறாவது புலன் மனம் உன் பெயர் கயல்விழிக்கும், உன் எண்ணமொழி தமிழோடும் தொடர்பில் உள்ளது சரி. கடவுள் உன்னோடு நேரடித் தொடர்பில் வந்து, நீ நிறைவேற்றித் தர கேட்கும் வேலைகளை உன் நினைவில் மீட்ட முடியும். அதை நீ நிறைவேற்றித்தரும் போது கடவுள் உன் கேட்பை நிறைவேற்றித் தர உன் ஒவ்வொரு வெற்றியும் சாத்தியம் ஆகும்.

நீ கடவுளிடம் உன்செயல், எண்ணம், தமிழ் (எண்ணமொழி) மூலமாக ஆயிரம் கேட்கலாம். ஆனால்- கடவுள் அழைப்பு உன்னை வந்தடையா வகைக்கு, அழைப்பு திசைதிருப்பல் பயன்முறையில் நீ இருந்தாய் ஆனால், நீ நிறைவேற்றித் தர கேட்கும் வேலைகளை உன் நினைவில் மீட்ட முடியாது. மாறாக நீ சூட்டிக் கொண்டுள்ள பெயரின் எண்ண மொழிக்கு சென்று அந்த எண்ணமொழியின் குலதெய்வங்களால், நீ வரிசையில் நிறுத்தப்பட்டு, தாமதமாகவே, நீ நிறைவேற்றித் தர கேட்கும் வேலைகளை உன் நினைவில் மீட்ட முடியும்.

உன்னுடைய பெயரை கயல்விழிக்கு மாற்றாக அயல்சார்பில்- லாவண்யாஸ்ரீ என்றோ, நூர்ஜகன் என்றோ, அருள்மேரி என்றோ சூட்டியிருப்பார்களேயானால் அந்தந்த பெயரின் எண்ணமொழி, எண்ணமொழி சார்ந்த மதம், குலதெய்வங்கள் அனைத்தையும் கடந்தே, கடவுளால்- நீ நிறைவேற்றித் தர கேட்கும் வேலைகளை உன் நினைவில் மீட்ட முடியும்.

இதை நடப்பு இயல்அறிவுக் கருவியான செல்பேசியில் முன்னெடுக்கப்படும், அழைப்பு திசைதிருப்பல் பயன்முறையோடு ஒப்பிட்டுத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். 

எடுத்துக்காட்டாக உங்கள் பெற்றோர் உங்களுக்கு வாங்கித்தரும் செல்பேசியில், அழைப்பு திசைதிருப்பல் பயன்முறையை அமைத்து உங்களுக்குக் கொடுத்துவிட்டால், நீங்கள் யாரோடும் உங்கள் செல்பேசியில் பேசமுடியும். உங்களை யாரும் உங்கள் செல்பேசி வழியாக தொடர்பு கொள்ள முடியாது. இடையில்,  அழைப்பு திசைதிருப்பல் பயன்முறை அமைப்பில் பதியப்பட்ட செல்பேசி (பெற்றோர் செல்பேசி) வழியாகத்தான் உங்களைத் தொடர்பு கொள்ள முடியும்.

சமஸ்கிருத, ஆங்கில, உருதுப் பெயர்களை நம் பிள்ளைகளுக்குச் சூட்ட, பல்வேறு மதங்கள் முனைவதில் உள்ள உள்நோக்கம் (ஆதிக்கஅரசியல்), இயல்பாக வெற்றிகளைக் குவித்து நாம் பேரளவாக வளர்ந்து விடும்வகைக்கு நம்மை கடவுள் நேரடியாகத் தொடர்பு கொண்டுவிடக்கூடாது என்பதற்கானது ஆகும். கவனமாக இருங்கள். யாரும் தங்களுடைய கடவுள் தொடர்பு அடையாளமான பெயரைத், தங்கள் தமிழில் (எண்ணமொழியில்) மட்டுமே சூட்டிக்கொள்ள வேண்டும்.

நான் கயல்விழி பேசுகிறேன்: எப்பொழுது பள்ளி வேலைநேரம் முடியும்? என்பெற்றோரிடம் நான் எப்போது தமிழாசிரியர் நடத்திய விழிப்புணர்வு வகுப்பு குறித்து பேசுவேன்? என்று பள்ளி வேலைநேரம் முடியும் வரை பரபரப்பாகவே இருந்தேன். 

வீட்டிற்கு சென்றதும் அம்மாவையும், அப்பாவையும் அழைத்து தமிழாசிரியர் நடத்திய விழிப்புணர்வு வகுப்பு குறித்து முழுமையாக தெரிவித்து முடித்தேன். 

என் அப்பா என்னை அணைத்துக்கொண்டு, என் தலையை அன்போடு தடவிக்கொடுத்துக் கெண்டே என் செல்பேசியை வாங்கி, என் செல்பேசியில் அவர் அமைத்திருந்த அழைப்பு திசைதிருப்பல் பயன்முறையை அகற்றிக் கொடுத்தார்.

கயல்விழியின் அப்பா பேசுகிறேன்: தமிழ்ப்பற்று மட்டும் போதாது. தமிழ்முன்னோர் முன்னெடுத்துள்ள முன்னேற்றக் கலைகளையும் அறிந்து கொள்வது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். மற்ற மற்ற மதச்சார்பில் பிறமொழிப் பெயரை நம் பிள்ளைகளுக்குச் சூட்டுவது மட்டுமல்ல, இயல்அறிவு (சயின்ஸ்) சார்பில் கடவுள், இறை, தெய்வம் என்கிற தமிழ்ச்சொற்களில் பொதிக்கப்பட்டுள்ள பொருளை அறிய முனையாததும் பிழை என்பதைப் புரிந்து கொண்டேன். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,507.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.