Show all

கோபிநாத் அறிவோம்! நாமும் கூட அந்தப் பாதையில் பயணிப்போம் வரிசையில்

தங்கள் இனமானவர்களை தேடிப்போய் அறிமுகப் படுத்திக் கொண்டு, பாரட்டுவதையும் அவர்களைக் கொண்டாடுவதையும் உலகில் இரண்டு இனங்கள் சிறப்பாக செய்து வருகின்றன. ஒன்று மலையாளிகள். இரண்டு பார்ப்பனியர்கள். நாமும் கூட அந்தப் பாதையில் நம் இனமானவர்களைக் கொண்டாடலாமே.

 

08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பெயர்: கோபிநாத். பிறந்தநாள்: 20,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5077  தமிழ்த்தொடர்நாள்: 1854132. கிழமை: வெள்ளிக் கிழமை.  ஆங்கிலம்: 04.07.1975 துறை: நிகழ்ச்சித் தொகுப்பாளர், எழுத்தாளர். சொந்த ஊர்: அறந்தாங்கி. படிப்பு: வணிக நிருவாகவியல் இளவல். பெற்றோர்: சந்திரன், குமுதம். வாழ்க்கைத்துணை: துர்கா. பிள்ளைகள்: வெண்பா (அழகான, புதுமையான, தமிழ்ப்பெயர்)

 

கோபிநாத் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், தனியார் பண்பலை ஒன்றில் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார். இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். தமிழ் நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் தன்னுடைய தமிழ் மொழிநடைக்காகவும், தனிப்பாணிக்காகவும் இவர் மிகவும் அறியப்படுகிறார். இவர் தொகுத்து வழங்கும் சில முதன்மையான நிகழ்ச்சிகள்: நீயா நானா, விஜய் விருதுகள், குற்றமும் பின்னணியும், நடந்தது என்ன? உன்னால் முடியும்.

 

இவர் ஒரு எழுத்தாளராகவும் பரிணமித்து வருகிறார். இவர் எழுதியுள்ள புத்தகங்கள்: தெருவெல்லாம் தேவதைகள், ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!, நேர் நேர் தேமா, நீயும் நானும்,

பெற்ற விருதுகள்: இந்தியா டுடே வழங்கிய இந்தியாவின் இளம் சாதனையாளர்கள் விருது. ஜூனியர் சேம்பர் இன்டர்நேசனல் அமைப்பு வழங்கிய சிறந்த இளம் இந்தியர் விருது ஆகியன.  நிமிர்ந்து நில், திருநாள் ஆகிய படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து பிரபலமானவர். 

 

நீயா நானா கோபிநாத்தை அறியாதவர்கள் இருக்க முடியாது.  'நீயா நானா' தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் இன்று உலகம் முழுக்க இருக்கும் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் எனப் பலருக்கும் தூண்டுகோளாக திகழ்பவர். ஆழமாகவும், ஆர்வம்  குறையாமல் பிறர் கேட்கும் வகையிலும் பேசுவதில் வல்லவர். நிறைய கல்லூரிகளில், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் பேசி பாராட்டு பெற்றிருக்கிறார். 

 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,160.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.