Show all

ஆப்கானிஸ்தானில் 80 விழுக்காட்டு பேர்களுக்குக் கொரோனா தொற்று இருக்கலாம்! இந்தியக் குடியுரிமை கோரி விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ள அந்த நாடுதான்

இந்தியக் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் என்று நாளது 24,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121 (10.12.2019) அன்று இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேறிய குடியுரிமை திருத்தச் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அந்த ஆப்கானிஸ்தானில் 80 விழுக்காட்டு பேர்களுக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.

24,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக, இந்தியக் குடியுரிமை பெற மதத்தை ஒரு காரணியாக்கிய குடியுரிமை திருத்த சட்டம் 24,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121 (10.12.2019) அன்று இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதால் இனி ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மத சிறுபான்மையினர் இந்தியக் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் என்பது தகவல்.

மத அடிப்படையிலான துன்புறுத்தலுக்கு உள்ளான என்று தெரிவிக்கப்பட்டு- ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், ஆகிய அண்டை நாடுகளில் மதச் சிறுபான்மையினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க இந்த சட்டத் திருத்தம் வழிவகை செய்கிறது. 

தங்கள் பாரம்பரிய மண்ணான ஆப்கானிஸ்தான் பற்றுதலில் நடுவண் பாஜக இப்படியொரு சட்டத்தை முன்னெடுத்த நிலையில், கொரோனா பரவல் வரை இந்திய முழுக்க குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது நினைவிருக்கும்.

அந்த, வடஇந்திய ஆரியர்களின் பூர்வீக மண், தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், 50 கோடி மக்கள் தொகையில், 80 விழுக்காட்டு  பேர்களுக்கு தொற்று இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

நல்லவேளை! நடுவண் பாஜக அரசின் குடியுரிமைச்சட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு இந்தியாவிற்கு யாரும் வந்துவிடவில்லை என்பது ஆறுதலான செய்தி.

குடிபெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் ஆப்கானிஸ்தான் அதிகாரி நிக்கோலஸ் பிஷப் கூறியதாவது:-
சனவரி முதல் ஈரான் மற்றும் பாகிஸ்தானிலிருந்து வேலையிழந்து, திரும்பி வந்த கிட்டத்தட்ட 2,71,000 மக்களுக்கு அடிப்படைவசதி வழங்க ஆப்கானிதான் தற்போது போராடி வருகிறது. 

ஆப்கானிய சமுதாயத்தின் சமூக-பொருளாதார நிலை காரணமாக, குடும்பங்கள் ஈரான் மற்றும் பிற அண்டை நாடுகளுக்கு  வேலைக்கு செல்லாமல் தொடர்ந்து வாழ முடியாது. 

இதற்கிடையில், தலிபான் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்கள் அதிகரித்ததன் காரணமாக ஒரு பகுதியில் மோதல்கள் விரிவடைவது நிலைமையை மோசமாக்கியுள்ளது.

அங்கு, உள்நாட்டுப் போர் நிலவரம் காரணமாக, நாட்டின் 30 விழுக்காட்டிற்கும் அதிகமான பகுதிகளில், பரிசோதனை நடத்த முடியாத நிலை உள்ளது. ஆப்கானிஸ்தானில், எட்டு பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு ஒரு நாளில், 100 முதல், 150 பரிசோதனைகள் மட்டுமே செய்யப்படுகின்றன. பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இல்லாததால், அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதிகள் இல்லை.

நாட்டில்  தனிமனித ஆயுட்காலம் 50 ஆண்டுகள் மட்டுமே, பெரும்பான்மையான மக்கள் காசநோய், எச்.ஐ.வி எய்ட்ஸ், புற்றுநோய் போன்ற நிலைமைகளுடன் பிறந்திருக்கிறார்கள், கூடுதலாக, சுற்றுச்சூழல் மாசுபாடு ஆபத்து உள்ளது.

தனிமனித இடைவெளியை பின்பற்றுவது, தனிமைப்படுத்திக் கொள்வது போன்ற நடைமுறைகள் அங்கு சாத்தியப்படுவதில்லை. அங்கு ஒரு குடும்பத்தில் சராசரியாக ஏழு பேர் இருக்கின்றனர். அவர்கள், சிறிய அறைகளில் வசிக்கின்றனர். சில நாட்களுக்கு மேல், அவர்களால் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்க முடிவதில்லை. அவர்களின் சமூக பொருளாதார நிலை, அதற்கு இடமளிப்பதில்லை. இதன் காரணமாக, உலக அளவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, அதிகம் உள்ள நாடாக ஆப்கானிஸ்தான் இருக்க வாய்ப்புள்ளது என அவர் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.