Show all

பலியைப் பகிர்ந்து கொள்ள நாளையிலிருந்து களம் இறங்குகிறது டாஸ்மாக்! கொத்து கொத்தாக கொரோனா தொற்று- முழுக்காரணம் கோயம்பேடு

கோயம்பேடு சந்தை மூடப்பட்ட நிலையில், சொந்த ஊருக்குச் செல்லக் கிளம்பியவர்களைப் பரிசோதித்தில், அத்தனை பேருக்கும் கொரோனா. தமிழகத்தில் 771பேர்களுக்கு இன்று கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், சென்னையில் 324 பேர்களுக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

23,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இன்று தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தொற்று அனைத்தும் கோயம்பேடு சந்தை தொடர்புடையவை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் 771பேர்களுக்கு இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த எண்ணிக்கை 4829 ஆக அதிகரித்துள்ளது. அதில் சென்னையில் மட்டும் 48 விழுக்காட்டிற்கும் மேல். அதாவது சென்னையில் 2004 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 2328 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 324 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தின் பெருநகரங்களில் சென்னை, இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் எண்ணிக்கைக்கு இணையாகச் செல்கிறது.

தமிழகத்தில் 24 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக இருந்த கோவை நேற்று அரியலூர், கடலூரில் அதிகரித்த நோய் எண்ணிக்கை அடிப்படையில் கோவை 4 வது இடத்துக்கு தள்ளப்பட்டது. சென்னைக்கு அடுத்தப்படியாக கடலூர் ஒரே நாளில் 95 எண்ணிக்கை அதிகரித்து 326 ஆக உள்ளது.

மூன்றாவது இடத்தில் அரியலூர் ஒரே நாளில் 188 அதிகரித்து 222 ஆக உள்ளது. கோவை பாதிப்பு எதுவும் இன்றி 4 வது இடத்தில் 146 என்கிற எண்ணிகையுடனும், 5 வது இடத்தில் செங்கல்பட்டு 9 அதிகரித்து 145 என்கிற எண்ணிக்கையிலும் உள்ளது. திண்டுக்கல்லில் 9அதிகரித்து 107 ஆக அதிகரித்துள்ளது., ஈரோடு 70 என்கிற அதே எண்ணிக்கையுடன் உள்ளது. திருவள்ளூர் 34 அதிகரித்து 129 ஆக உள்ளது.

விழுப்புரம் 5 அதிகரித்து 164 ஆக உள்ளது, திருவண்ணாமலையில் 17 அதிகரித்து 42 ஆக உள்ளது. மதுரையில் 20 அதிகரித்து 111 ஆக உள்ளது. தென்காசியில் 1 அதிகரித்து 51 ஆக உள்ளது. கரூர் 1 அதிகரித்து 45 ஆக உள்ளது.

பெரம்பலூர் தொற்று எண்ணிக்கை 3 அதிகரித்து 40 ஆக உள்ளது. திருப்பத்தூரில் 1 அதிகரித்து 20 ஆக உள்ளது. திருவாரூரில் தொற்று எண்ணிக்கை 1 அதிகரித்து 32 ஆக உள்ளது. திருச்சியில் 1 அதிகரித்து 57 ஆக உள்ளது. விருதுநகரில் 35 ஆக உள்ளது. வேலூர் 6 அதிகரித்து 22 ஆக உள்ளது. நெல்லை 1 அதிகரித்து 65 ஆக உள்ளது.

தூத்துக்குடி 2 அதிகரித்து 29 ஆக உள்ளது. திருவண்ணாமலை 17 அதிகரித்து 42 ஆக உள்ளது. தேனி 2 அதிகரித்து 51 ஆக உள்ளது. தஞ்சாவூர் 1 அதிகரித்து 63 ஆக உள்ளது. சேலம் 1 அதிகரித்து 35 ஆக உள்ளது. புதுக்கோட்டை 2 அதிகரித்து 3 ஆக உள்ளது, கிருஷ்ணகிரி 2 அதிகரித்து 4 ஆக உள்ளது. மொத்தம் காஞ்சிபுரம் 45 அதிகரித்து 87 ஆக உள்ளது. 24 மாவட்டங்களில் மட்டும் தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற மாவட்டங்களில் தொற்று இல்லை.

தமிழகத்தின் கொரோனா நிலவரத்தில், சென்னை முதலிடம் வகிப்பதற்கான காரணம், கட்டுப்பாடில்லாமல், கொரானா தொற்று யாருக்காவது இருக்கக் கூடும் என்கிற அச்சம் சிறிது கூட இல்லாமல், மக்கள் நெருக்கியடித்துக் கொண்டு சந்தைக்குச் சென்றதுதாம்.

அதுமாதிரியான இன்னொரு களம் அமைவதற்குத்தாம் தமிழக அரசு நாளையிலிருந்து மதுக்கடையைத் திறக்கும் வேலையைத் தொடங்கியிருக்கிறது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.