Show all

உலகப் பணக்காரர்கள்: இந்தியா பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது! சரசரவென கீழிறங்கி 1349வது இடத்தில் அனில் அம்பானி

23,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகக் கோடீசுவரர்கள் பட்டியலில் கடந்த ஆண்டு 19வது இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி 13வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

தொடர்ந்து அடிமேல் அடிவாங்கிக் கொண்டே இருக்கும் அனில் அம்பானி 1349வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அமெரிக்காவின் புகழ்பெற்ற போர்ப்ஸ் இதழானது ஆண்டுதோறும் உலகப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிடுவது வழக்கம். 

இந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் இந்தியத் தொழில் அதிபர்கள் இடம்பெறுவது என்பது சொற்ப அளவிலேயே உள்ளது. 

போர்ப்ஸ் இதழில் வெளியிடப்பட்ட உலக கோடீசுவரர்கள் பட்டியலில் இந்தியத் தொழில் அதிபர்கள் 106 பேர் இடம்பெற்று இருந்தாலும் பெயர் சொல்லிக் கொள்ளும்படி உள்ளவர்கள் 12 பேர் மட்டுமே. 

கச்சா எண்ணை சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஸ் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே 13வது இடத்தைப்பிடித்தார். 

போர்ப்ஸ் இதழில் இடம்பிடித்துள்ள இந்தியக் கோடீஸ்வரர்களின் பட்டியலில் பரிதாபத்திற்குரியவர் யார் என்றால் ஆர்.காம் நிறுவனத்தின் தலைவரும், முகேஷ் அம்பானியின் உடன் பிறந்த தம்பியான அனில் அம்பானி தான்.   

பில்கேட்ஸ் இ-காமர்ஸ் துறையின் முன்னோடியும் புகழ் பெற்ற அமேசான் நிறுவனத்தின் தலைவருமான பெசோஸ், மைக்ரோசாஃப்ட் நிறுவன தலைமை அதிகாரியான பில்கேட்ஸ் மற்றும் பெர்க்ஷையர் ஹாத்வே நிறுவனத்தின் தலைமை அதிகாரியான வாரன் பஃபேட்டைப் பின்னுக்குத் தள்ளி, தொடந்து முதலிடத்திலேயே நீடிக்கிறார். இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.9.24 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.    கடந்த ஆண்டு முகேஷ் அம்பானி 19வது இடத்தில் இருந்தார். இந்த ஆண்டு 6 இடங்கள் முன்னேறி 13வது இடம்பிடித்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு சுமார் ரூ.2.83 லட்சம் கோடியாக இருந்த இவருடைய சொத்து மதிப்பானது இந்த ஆண்டு சுமார் ரூ.3.53 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 

அசிம் பிரேம்ஜி 36வது இடத்தில் விப்ரோ நிறுவனத்தின் தலைவரும் கொடை வள்ளலுமான அசிம் பிரேம்ஜி 36ஆம் இடத்தில் உள்ளார். இவருடைய சொத்து மதிப்பானது சுமார் ரூ.1,60,000 கோடியாக உள்ளது. இந்தியாவில் கல்வியை மேம்படுத்துவதற்காக தன்னுடைய சொத்தில் இருந்து தொண்டு நிறுவனத்திற்கு ரூ.220 கோடியை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

போர்ப்ஸ் இதழில் ஆண்டு தோறும் தவறாமல் இடம்பிடிக்கும் இந்திய கோடீசுவரர்களில் ஒரே தமிழர் சிவ் நாடார் மட்டுமே. உலக கோடீசுவரர்களின் பட்டியலில் 82வது இடத்தில் உள்ளார். ஹெச்.சி.எல் மென்பொருள் நிறுவனத்தின் இணை நிறுவனரும் கல்வியாளரும், இவருடைய சொத்துமதிப்பானது சுமார் ரூ.1,00,000 கோடியாகும். 

லட்சுமி மிட்டல் இரும்பு உற்பத்தித் துறையின் ஜாம்பவனான லட்சுமி மிட்டல் 91வது இடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து இந்தியப் பணக்காரர்களின் பட்டியலில் ஆதித்யா பிர்லா குழுமங்களின் தலைவர் குமார் பிர்லா 122வது இடத்தைப் பிடித்துள்ளார். 

அதானி குழுமம் பாஜக கட்சித் தலைவர் அமித்ஷாவின் நெருங்கிய நண்பரும், அதானி குழுமத்தின் தலைவரும் நிறுவனருமான கௌதம் அதானி 167வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவிலுள்ள விமான நிலையங்களின் பராமரிப்பு மற்றும் புதிதாக ஜார்கண்ட் மாநிலத்தின் மின் உற்பத்தி திட்டத்தை கைப்பற்றியதால் இவருடைய சொத்து மதிப்பானது உயர்ந்துள்ளது. 

பார்தி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் 244வது இடத்தையும், பதஞ்சலி ஆயுர்வேதாவின் இணை நிறுவனர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா 365வது இடத்தையும், பிராமல் நிறுவனங்களின் தலைவர் அஜய் பிராமல் 436வது இடத்தையும் பயோகான் நிறுவனர் கிரண் மஜூம்தார்-ஷா 617வது இடத்தையும், இன்ஃபோசிஸ் லிமிடெட் இணை நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி 962வது இடம்பிடித்துள்ளனர். 

போர்ப்ஸ் இதழில் இடம்பிடித்துள்ள இந்தியக் கோடீஸ்வரர்களின் பட்டியலில் பரிதாபத்திற்குரியவர் யார் என்றால் ஆர்.காம் நிறுவனத்தின் தலைவரும், முகேஷ் அம்பானியின் உடன் பிறந்த தம்பியான அனில் அம்பானி தான். இந்தியக் கோடீஸ்வரர்களின் பட்டியலில் இவர் 1349வது இடத்தையே பிடிக்க முடிந்தது. இவருடைய சொத்து மதிப்பானது சுமார் ரூ.13408 கோடியாகும். ஆர்.காம் நிறுவனம் திவால் ஆனதால் இவரின் மற்ற நிறுவனங்களின் சந்தை மதிப்பும் ஆட்டம் கண்டது. இதன் காரணமாகவே இந்தியக் கோடீஸ்வரர்களின் பட்டியலில் சரசரவென கீழிறங்கி 1349வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,084.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.