19,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சீக்கியர்களின் பத்து குருமார்களில் முதன்மையானவரான குருநானக், தற்போது பாகிஸ்தான் பகுதியாகி விட்ட கர்தார் குருதுவாராவில் சமாதி அடைந்ததாக கருதப்படுவதால் சீக்கியர்களுக்கு அது புனிதத் தலமாக விளங்குகிறது. சீக்கியர்களுக்காக நல்லெண்ண அடிப்படையில் கர்தார்புர் குருதுவாராவுக்கான எல்லையை திறக்கப் போவதாக முன்பு பாகிஸ்தான், அறிவித்திருந்தது. இந்திய அரசு பேச்சுவார்த்தைக்கு வராத நிலையில், கர்தாபுர் வாசல் திறக்கப்பட வேண்டிய தேவை தங்களுக்கு மட்டும் என்ன இருக்கிறது என்று பாகிஸ்தான் கேள்வி எழுப்பியுள்ளது. பேச்சுவார்த்தைக்கு இந்தியா ஒப்புதல் அளிக்காவிட்டால், பாகிஸ்தானிலுள்ள கர்தார்புர் குருதுவாராவிற்குள் சீக்கியர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்று இந்தியாவுக்கு பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. காஷ்மீர் விவகாரம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ள போதும், பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் சாத்தியப்படாது என்று இந்தியா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப் பட்டு வருகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,931.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.