தடுப்பு மருந்துக்கான அடிப்படை நோய் நச்சுதான். எனவே தடுப்பு மருந்து என்பது- இல்லாத வொன்றைக் கண்டுபிடிப்பது அல்ல. நோய் நச்சிலிருந்து பாதுகாப்பான நோய்த் தடுப்பு மருந்தாக உருவாக்குவது. 18,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: நோய் வந்த பிறகு மருந்து கொடுத்து குணமளிக்கிற முறை மிகப் பழமையான முறையாகும். இதற்கான மருந்துகள் கண்டுபாவனை முறையில் (டிரையல் அண்டு எர்;ரர் மெத்தேடு) கண்டுபிடிக்கப் பட்டவைகள். இந்த மருத்துவ முறைகள் நாட்டுக்கு நாடு மாறுபட்டவை. தமிழர்கள் முன்னெடுத்த மருத்துவ முறை தமிழ்மருத்துவம் என்றும், சித்த மருத்துவம் என்றும், நாட்டு மருத்துவம் என்றும் அழைக்கப் படுகிறது. இந்த மருத்துவ முறையில் மருந்துகளாக ஒன்பது வகை நச்சுக்களை வீரியப் படுத்தியும், தாவரங்களின் வேர் முதல் கனி வரை மருந்துகளாகவும் பயன்படுத்தப் படுகின்றன. ஆயுர் வேதம் என்பது ஆரியர்களுக்குச் சொந்தமான மருத்துவ முறையாக வட இந்தியாவில் புழங்கி வந்த பழமையான மருத்துவ முறையாகும். இதில் மருந்துகளாக தாவரங்கள் மட்டுமே பயன்படுத்தப் படுகின்றன. யுனானி என்பது அராபியர்களின் மருத்துவ முறையாகும். இதில் முதன்மையாக இறைச்சி வகைகள் மருந்துகளாகப் பயன்படுகின்றன. அக்குபங்சர், அக்குபிரசர் என்பன பழமையான சீன மருத்துவ முறையாகும். இதில் ஒவ்வொரு நோயுக்கும் உடலில் மிக மிக மெல்லிய ஊசியால் குத்தப் படுகிறது அல்லது அழுத்தப் படுகிறது. அல்லோபதி மருத்துவ முறை என்பது குறிப்பாக ஐரோப்பிய மருத்துவ முறையாகும். ஆனால் உலகம் முழுவதும் எந்த ஒரு நோயின் குணமளிப்புக்கும் இந்த மருத்துவ முறையையே பின்பற்றுகின்றன. இதில் அனைத்து வேதிப் பொருட்களும் மருந்துகளாகப் பயன்படுகின்றன. வேதிப்பொருட்கள் நோய் தீர்ப்பதில் அதிரடியானவைகள் ஆகும். ஆனால் அதே சமயம் எல்லா மருந்துகளுக்கும் சில பல அதிரடியான பக்க விளைவுகளும் இருக்கும். இந்த மருத்துவம் பயில்கிறவர்கள் குணமளிப்பு, பக்கவிளைவு இரண்டையும் படித்து நோயை குணப்படுத்தி வருகிறார்கள். இந்த மருத்துவ முறையால் நோய்கள் குணமளிக்கப்பட்டாலும், சில தாங்கிக் கொள்ளக் கூடிய மென்மையான நோய்களை குணமானவர் புதியதாக பெற வாய்ப்பும் இருக்கிறது. அந்த வகையில் மற்ற மருத்துவ முறைகளுக்கு இப்படியான பக்கவிளைவுகள் இல்லாத காரணத்தால், பேரறிமுகமான அல்லோபதி மருத்துவத்தை மற்ற மரபு மருத்துவ முறைகள் எதிர்த்து நிற்க முடிகிறது. இதனால் இந்த மருத்துவ முறைகளுக்கும் அல்லோபதி மருத்துவ முறைக்கும் ஒரு போட்டி இருந்து கொண்டேயிருக்கிறது. அடுத்ததாக ஓமியோபதி மருத்துவம்: ஹானிமென் என்கிற ஜெர்மானிய அல்லோபதி மருத்துவரால் உருவாக்கப்பட்டதாகும். இவர் அல்லோபதி மருத்துவம் பயின்ற அல்லோபதி மருத்துவர்தாம். ஆனால் அந்த மருத்துவ முறையில் இருந்த பக்கவிளைவு போன்ற காரணிகள் அவருக்கு நிறைவுதரவில்லை. பக்கவிளைவு இல்லா மருத்துவமுறை தேடலில் அவருக்கு கிடைத்ததுதாம் ஹோமியோபதி மருத்துவ முறையாகும். இந்த ஓமியோபதி மருத்துவமுறைதான் தடுப்பு மருந்துகள் தோற்றத்திற்கான அடிப்படையாகும். ஏனென்றால் ஒமியோபதியில் உள்ள அனைத்து மருந்துகளுமே ஒத்ததை ஒத்ததால் குணமளித்தல் என்கிற அடிப்படையிலேயே கண்டறிப்பட்டவைகள். ஒரு சிறிய எடுத்துக்காட்டின் மூலம் விளக்குவதென்றால் வெங்காயம் குறித்து அனைவரும் அறிவோம். அது கண் எரிச்சலைத் தரும். மூக்கில் நீரை ஒழுகச் செய்யும் மென்மையான காய்ச்சலையும் உருவாக்கும். வெங்காயம் நேரடிப்பயன்பாட்டில் இந்த நோய்களை அது நமக்குத் தரும். இந்த வகையான அறிகுறிகள் உள்ள எந்த நோயுக்கும்- வெங்காயத்திற்கு நோய் எதிர்ப்பு வீரியத்தைக் கூட்டி, (நோய் எதிர்ப்பு வீரியத்தைக் கூட்டுவது என்பது வெங்காயத்தின் நேரடியாக நோய்தரும் திறனைக் குறைப்பது ஆகும்.) மருந்தாகத் தருகிறது ஓமியோபதி மருத்துவ முறை. வெங்காயச் சாற்றால் உருவாக்கப்பட்ட இந்த ஓமியோபதி மருந்துக்கு அல்லியம் சீபா என்று பெயர். வெங்காயச்சாற்றை எப்படி வீரியப்படுத்துகிறார்கள்? நூறு பங்கு சாரயத்தில் ஒரு பங்கு வெங்காயச் சாற்றைக் கலந்து நன்றகக் கலக்கக் கிடைப்பது 1சி வீரியம் உள்ள மருந்தாகும். அந்த ஒருசி வீரியம் உள்ள அல்லியம் சீபாவை, நூறு பங்கு சாராயத்தில் கலக்கக் கிடைப்பது 2சி வீரியம் உள்ள அல்லியம் சீபா ஆகும். அந்த இரண்டு சியின் மூலம் 3சி அந்த மூன்று சியின் மூலம் 4சி என்று தொடர்ந்து வெங்காயத்தின் அடிப்படையை நிறைய நிறைய குறைத்து 30சி அல்லியம் சிபாதான் ஓமியோபதி மருந்துக் கடைகளில் மருந்தாகக் கிடைக்கிறது. அதனாலேயே ஓமியோபதி மருந்துகளை அணுவாக்கப்பட்ட மருந்து என்கின்றனர். அதாவது பரியியல் (பிசிக்கல்) முறையில் வெங்காயச்சாறு அணுவாக்கப் பட்டிருக்கிறது. அல்லோபதி மருத்துவர்கள் இதில் எப்படி வெங்காயம் இருக்கும் என்று பகடியாடுவார்கள். ஆனால் ஓயாத தும்மலுக்கு அல்லியம் சீபாவை நான்கு பால்சர்க்கரைக் குருணையோடு சேர்த்து சாப்பிட்டால் சில வினாடிகளில் தும்மல் நின்று வியப்படையும் வகையில் குணம் தரும். இந்த அடிப்படையில்தான் அம்மை நோயிக்கு அம்மைப்பால் தடுப்பு மருந்தாக அல்லோபதியில் முதன் முதலாகக் கண்டறிப்பட்டது. ஆனால் ஓமியோபதிக்கும், அல்லோபதிக்கும் வீரியப்படுத்தல் முறைகள் வேறு வேறானதாகும். ஓமியோபதியில் காசநோயிக்கு டியுபர்குலினம் என்ற மருந்து காசநோய் வந்தவரின் நச்சுவை வீரியப்படுத்தி மருந்தாகக் கொடுக்கப் படுகிறது. கொரோனா நச்சுவை ஓமியோபதி முறையில் வீரியப்படுத்தி கெரோனாவிற்கு மருந்தாக உறுதியாகக் கொடுக்க முடியும். உறுதியாக கொரோனா குணமாகும். ஆனால் அதற்கு மிகப்பெரிய நிறுவன அமைப்பு வேண்டும். தற்போது ஓமியோபதி மருந்துக்களை உருவாக்கி சந்தையில் விற்று வருகிற பெரிய நிறுவனங்களால் முடியும். இந்தியாவின் ஆயுஷ் ஓமியோபதி துறையில், குறிகளின் அடிப்படையில் கொரோனாவற்கு மருந்தாக ஆர்சனிகம் ஆல்பம் 30சி பரிந்துரைத்திருக்கிறார்கள். இந்தியாவில் ஓமியோபதி மருந்து உருவாக்கும் மாபெரும் நிறுவனம் எதுவும் இல்லை. ஓமியோபதி முறையில் வீரியப்படுத்தபடும் மருந்துகள் குணமளிப்புக்கே பயன்படுத்தப் படுகிறது. அல்லோபதி முறையில் வீரியப்படுத்தப்படும் நோய் நச்சுக்கள் நோய் தடுப்புக்கு பயன்படுத்தப் படுகிறது. உலகம் முழுவதும் எங்கு கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தாலும் அது கொரோனா நச்சிலிருந்துதாம் உருவாக்கப்பட வேண்டும். அது கொரோனாவிற்கு தடுப்பாக அமையாமல் கொரோனா பரப்புதலுக்கான நுண்ணுயிரித் தாக்குதலாக (பயோவார்) அமைந்து விடாமல் வீரியப்படுத்தும் முறையை கவனமாக கண்டறிய வேண்டிய நிலையிருப்பதாலேயே கொரோனாவிற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. அல்லோபதி வீரயப்படுத்தலில், தடுப்பு மருந்தானது குறிப்பிட்ட நோய்க்கான நோய்க்காரணியை ஒத்திருப்பினும், குறிப்பிட்ட மருந்தானது பலவீனமாக்கப்பட்ட நுண்ணுயிரியையோ அல்லது கொல்லப்பட்ட நுண்ணுயிரியையோ அல்லது அதன் நச்சுப்போருளில் இருந்தோ பெறப்பட்ட ஒரு பகுதிப்பொருளையோ கொண்டதாக இருக்கும். இவ்வாறு உட்செலுத்தப்படும் இந்த மருந்து உடலினால் அந்நியப்பொருளாக அடையாளப்படுத்தப்பட்டு அவற்றை அழித்துச் சிதைக்க உடலின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை தொழிற்படும். இது பின்னர் நினைவில் கொள்ளப்பட்டு, அதுபோன்ற வேறு நுண்ணுயிர் பின்னர் உடலைத் தாக்கும்போது விரைவான தொழிற்பாட்டால் நோய் ஏற்படாது தடுக்கப்படும். பாக்டீரியா, நுண்நச்சு போன்ற நுண்ணுயிரிகளை சில குறிப்பிட்ட நிருவகிப்பின் மூலம் மாற்றியமைத்து இவ்வகையான தடுப்பு மருந்துகள் பெறப்படுகின்றன. அல்லோபதி வீரியப்படுத்தல் வகைகள்;:- 1.உயிருள்ள தடுப்பு மருந்து: வீரியம் குறைக்கப்பட்ட நுண்ணுயிரி உயிருடன் உடலுள் செலுத்தப்படல். எடுத்துக்காட்டு- போலியோ சொட்டு மருந்து 2.உயிரற்ற தடுப்பு மருந்து: கொல்லப்பட்ட நுண்ணுயிரி உடலுள் செலுத்தப்படல். எடுத்துக்காட்டு- டைபாயிடு தடுப்பூசி 3.பகுதிப்பொருள் தடுப்பு மருந்து: நுண்ணுயிரியின் ஒருபகுதி செலுத்தப்படல். எடுத்துக்காட்டு- ஹெப்படைடிஸ் பி தடுப்பூசி 4.நச்சு ஒப்பி (டாக்சாயிட்) தடுப்பூசி: செயலிழந்த பாக்டீரிய நச்சு உடலுள் செலுத்தப்படல். எடுத்துக்காட்டு- டெட்டனசு தடுப்பூசி 5.நோய்எதிர் புரதத் தடுப்பு மருந்து: உடனடி பாதுகாப்புக்காக நோய் எதிர்ப்பு புரதத்தை உடலில் செலுத்தல். எடுத்துக்காட்டு- டெட்டனசு மற்றும் வெறிநாய்க்கடி நோய் எதிர் புரதம் (இம்முனியோகுளோபம்) இதில் ஒரு வகையாகவோ, அலலது வேறு புதிய வகையாகவோ கொரோனாவிற்கான தடுப்பு மருந்து உருவாக்க உலகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட மையங்களில் செயல்பாடுகள் நடந்தேறி வருகின்றன. இந்தியாவில் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து ஒன்றுக்கு மனித சோதனைக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் இருக்கும் பாரத் பயோடெக் என்ற நிறுவனம் இந்த மருந்தை உருவாக்கியுள்ளது. கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்க உலகம் முழுக்க தீவிரமான முயற்சிகள் நடந்து வருகிறது. இது தற்போது பெரிய போட்டியாகவே மாறியுள்ளது. கொரோனா நுண்நச்சுக்கு எதிராக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் தற்போது தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது. ஆக்ஸ்போர்ட் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் மருந்து உலக அளவில் திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் கூறுகிறார்கள். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு, தேசிய நுண்ணுயிரியியல் ஆய்வகம் ஆகியவை பாரத் பயோடெக் நிறுவனம் உடன் இணைந்து இந்த மருந்தை உருவாக்கி உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக இந்தத் தடுப்பு மருந்தில் தீவிரமான சோதனைகளை செய்து இருக்கிறார்கள். இதுவரை செய்யப்பட்ட சோதனைகள் நல்ல முடிவை கொடுத்துள்ளன. அந்த நிறுவனத்தில் இருக்கும் நிகழ்நிலை தரத்திலான சோதனை கூடத்தில் மிகுந்த பாதுகாப்பிற்கு இடையில் இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மனிதர்களின் மீது முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகளை மேற்கொள்ள இந்த மருந்துக்கு நடுவண் அரசின் மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது. இதுவரை செய்யப்பட்ட சோதனைக்கூட சோதனைகளின் இந்த கோவாசின் என்று பெயரிடப்பட்டுள்ள இந்திய தடுப்பு மருந்து நலன் முடிவுகளை கொடுத்துள்ளது. இதன் எதிர்ப்பு சக்தி, பாதுகாப்பு அதிகம் உள்ளது என்கிறார்கள். இதனால் மனிதர்கள் மீது சோதனை நடத்த இந்த மருந்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கோவாசினை உருவாக்கி இருக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் இதற்கு முன் போலியோ, ரேபிஸ், ஜாப்பனீஸ் என்சிபிலிட்டிஸ், சிக்கன்குன்யா, சிகா ஆகிய நுண்நச்சுகளுக்கு தடுப்பு மருந்து உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



