08,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதினெட்டு நிமிடங்கள் ஓடும் காணொளி, பதிவிடப்பட்ட சிறிது நேரத்திலேயே 3 லட்சம் பார்வையாளர்களை கடந்தது. பாம்பு பிடிப்பவர்கள்- அமெரிக்காவில் ஒரு வீட்டிற்குள் இருந்து 45 கட்டுவிரியன் பாம்புகளை இலாவகமாக பிடிக்கும் காணொளி. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள அல்பேனி பகுதியில் ஒரு வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த வீட்டின் உரிமையாளர், திடீரென தொலைக்காட்சி நிகழ்ச்சி தெரியாமல் போகவே, தற்செயலாக வீட்டிற்கு அடியில் வந்து பார்த்துள்ளார். அங்கே சில பாம்புகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உடனடியாக அப்பகுதியின் பாம்புகள் பிடிக்கும் குழுவினருக்கு தகவல் கொடுத்துள்ளார். பாம்புகளை பிடிப்பவர்கள் சிலர் அந்த வீட்டிற்கு விரைந்தனர். தொடக்கத்தில் சில பாம்புகளை கண்ட அவர்கள், பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது 40க்கும் மேற்பட்ட பாம்புகள் இருப்பதை கண்டு திகைத்தனர். பின்னர் சாமர்த்தியமாக அனைத்து பாம்புகளையும் பிடித்துச் சென்றனர். பாம்புகளைப் பிடித்தவர்கள் கூறுகையில், கொடிய நஞ்சுள்ள விரியன் வகையைச் சேர்ந்தவை இந்தப் பாம்புகள். இவை தங்களுக்கான பாதுகாப்பு தேடியே இங்கு வந்துள்ளன. நல்லவேளை இந்தப் பாம்புகள் வீட்டின் உரிமையாளர் கண்ணில் பட்டது. வீட்டில் அடியில் இருந்த 45 பாம்புகளையும் பாதுகாப்பாக மீட்டுள்ளோம்' என தெரிவித்தனர். இந்தக் காட்சியை தன் செல்பேசியில் காணொளி எடுத்த ஒருவரால், முகநூலில் பதிவிடப் பட்டு தீயாகி வருகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,099.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.