Show all

தமிழக நாடளுமன்றத் தேர்தலுக்கு வேட்பாளர்கள் நிறைவு! அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட

08,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வரும் மக்களவை தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட உள்ள 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப் பட்ட நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட 38 வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சியான இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஒருவரும் சேர்த்து 39 தமிழக நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நிறைவு செய்திருக்கிறது.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதன் 2வது கட்டமாக, தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்காக தமிழகத்தில் அதிமுக, திமுக என இருபெரும் கூட்டணிகள் உருவாகியுள்ளன. 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சியுடன் இணைந்து, வரும் தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை 24 மக்களவை தொகுதிகளுக்கு முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் மீதமுள்ள 14 மக்களவை தொகுதிக்கான 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தமிழக நாடாளுமன்றத் தேர்தலுக்காக முழுமையடைந்த வேட்பாளர்கள் பட்டியல்:

1.திருவள்ளூர்(தனி) - பொன்.ராஜா 

2.தென் சென்னை - இசக்கி சுப்பையா 

3.திருப்பெரும்புதூர் - தாம்பரம் நாராயணன் 

4.காஞ்சிபுரம்(தனி) - முனுசாமி 

5.விழுப்புரம்(தனி) - கணபதி 

6.சேலம் - செல்வம் 

7.நாமக்கல் - சாமிநாதன் 

8.ஈரோடு - செந்தில்குமார் 

9.திருப்பூர் - செல்வம் 

10.நீலகிரி(தனி) - ராமசாமி 

11.கோயம்புத்தூர் - அப்பாதுரை 

12.பொள்ளாச்சி - முத்துக்குமார் 

13.கரூர் - தங்கவேல் 

14.திருச்சி - சாருபாலா தொண்டைமான் 

15.பெரம்பலூர் - ராஜசேகரன் 

16.சிதம்பரம்(தனி) - இளவரசன் 

17.மயிலாடுதுறை - செந்தமிழன் 

18.நாகப்பட்டினம்(தனி) - செங்கொடி 

19.தஞ்சாவூர் - முருகேசன் 

20.சிவகங்கை - பாண்டி 

21.மதுரை - டேவிட் அண்ணாதுரை 

22.ராமநாதபுரம் - ஆனந்த் 

23.தென்காசி(தனி) - பொன்னுத்தாய் 

24.திருநெல்வேலி - ஞான அருள்மணி

25.தேனி - தங்க தமிழ்ச் செல்வன் 

26.வடசென்னை - சந்தான கிருஷ்ணன் 

27.அரக்கோணம் - பார்த்திபன் 

28.வேலூர் - பாண்டுரெங்கன் 

29.தருமபுரி - பி.பழனியப்பன் 

30.ஆரணி - செந்தமிழன் 

31.கள்ளக்குறிச்சி - கோமுகி மணியன் 

32.தூத்துக்குடி - மருத்துவர் புவனேஸ்வரன் 

33.கன்னியாகுமரி - லெட்சுமணன் 

34.கிருஷ்ணகிரி - கணேசகுமார் 

35.திருவண்ணாமலை - ஞானசேகர் 

35.திண்டுக்கல் - ஜோதிமுருகன் 

37.கடலூர் - கே.ஆர்.கார்த்திக் 

38.விருதுநகர் - பரமசிவ ஐயப்பன்

39.நடு சென்னை - தெகலான்பாகவி இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளர்

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,099.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.