Show all

சனநாயகத்தை நிலை நாட்டியுள்ளார் ரணில் விக்கிரமசிங்கே! கல்வித்துறை இணையமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் விஜயகலா மகேசுவரன்

07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அரசு நிர்வாகத்துக்கு இணையாக விடுதலைப் புலிகள் ஆட்சி செய்தபோது மக்கள் பாதுகாப்பாக உணர்ந்ததாக விஜயகலா முன்னர் பேசியிருந்தார்.

இலங்கையில் விடுதலைப் புலிகளின் நிருவாகத்தை ஒப்பிட்டு காட்டி. அரசு நிருவாகத்தை குறைபட்டுக் கொண்ட விஜயகலா மகேசுவரன், பதவியிழந்து, கைதாகி பின்னர் விடுதலையானார். தற்போது ரணில் விக்கிரமசிங்கேவின் புதிய அமைச்சரவையில் கல்வித்துறை இணையமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

இலங்கையில் குழந்தைகள் நலத்துறை இணையமைச்சராக இருந்தவர் விஜயகலா மகேசுவரன். தமிழரான இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார்.

தனது உரையின் இடையே, தமிழர்கள் அதிகமாக வாழும் நாட்டின் வடக்கு மாகாணத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு வருவதாக சுட்டிக்காட்டிய விஜயகலா மகேசுவரன், முன்னர் அரசு நிர்வாகத்துக்கு இணையாக விடுதலைப் புலிகள் இப்பகுதியை ஆட்சி செய்தபோது மக்கள் பாதுகாப்பாக உணர்ந்ததாக குறிப்பிட்டார்.

அவரது இந்த கருத்துக்கு சிங்கள பேரினவாத அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அடுத்த மாதம் இந்த பிரச்சனையை மையமாக வைத்து ராஜபக்சே உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.

விஜயகலா மகேசுவரனை அமைச்சர் பதவி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக பேசிய அவரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து விஜயகலா மகேசுவரன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இலங்கை அரசின் தலைமை வழக்கறிஞரின் ஆலோசனையின் பேரில் அவருக்கு எதிராக காவல்துறையினரின் விசாரணை நடத்தப்பட்டு கைது செய்தனர். பின்னர், அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், அந்நாட்டு அரசியலில் சிங்கள பேரினவாதத்தை முன்னிறுத்தி உருவாக்கப் பட்ட குழப்ப நிலை தீர்ந்து ரணில் விக்கிரமசிங்கே மீண்டும் தலைமை அமைச்சர் ஆகியுள்ள நிலையில், நேற்று புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். விஜயகலாவுக்கு கல்வித்துறை இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அதிபர் சிறிசேனா முன்னிலையில், அவர் பதவியேற்றுக்கொண்டார்.

மக்கள் ஒத்துழைப்பு இல்லாமலேயே, சிறுபான்மை சிங்கள பேரினவாதிகள் அணி சேர்ந்து, சிங்கள பேரினவாத அரசை மீண்டும் நிறுவ முயன்றது, ஐம்பது நாட்கள் இலங்கையை குழப்பை நிலையில் வீழ்த்தியது. 

மக்களாட்சியில் நம்பிக்கையுள்ளவர்கள் மற்றும் உச்சஅறங்கூற்று மன்றத்தின் ஒத்துழைப்போடு இலங்கையின் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டு வந்து வெற்றி வாகை சூடிய ரணில் விக்கிரமசிங்கேவின், சமத்துவமான மக்களாட்சிக்கு உலகம் பாராட்டு தெரிவிக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,009. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.