Show all

மேடையில் தூங்கி வழிந்த குமாரசாமி! சாடை பேசி மகிழ ஊடகங்களுக்கு வாய்ப்பு

07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிறு வியாபாரிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்கும் விழர் தூங்கி வழிந்த குமாரசாமி குறித்த காணொளி இணையத்தின் இன்;றைய தீப்பரவல்.

கர்நாடகத்தில் தெருவோர வியாபாரிகள் மொத்தம் 4.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்களில் 80 ஆயிரம் பேர் பெங்களூரில் உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தை முதல்வர் குமாரசாமி; தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டத்தின்படி தெருவோர வியாபாரிகள் என்ற அடையாள அட்டை, ஆதார் அட்டை இருப்போருக்கு 9 வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் ரூ. 2000 முதல் ரூ. 10 ஆயிரம் வரை வட்டியில்லா கடன்கள் வழங்கப்படுகிறது.

அதன்படி பெலகாவியில் தெருவோர வியாபாரிகளுக்கு கடன் வழங்குவதற்கான காசோலைகள் வழங்கும் திட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் முதல்வர் குமாரசாமி கலந்து கொண்டு காசோலைகளை வழங்கினார். முன்னதாக அவர் இந்த விழாவில் தூங்கி வழிந்தார். இதுகுறித்த காணொளியே இணையத்தில் இன்றைய தீப்பரவல்

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,009.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.