பெண் இதழியலாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்து உள்ளது. பெங்களூருவை சேர்ந்த மூத்த இதழியலாளரும் சமூக ஆர்வலருமான கவுரி லங்கேஷ் நேற்று இரவு சுட்டுக்கொல்லப்பட்டார். லங்கேஷ் பத்ரிகே என்ற இதழின் முதன்மை ஆசிரியர் கவுரி லங்கேஷ். பல்வேறு பிரபல ஆங்கில நாளேடுகளில் பணியாற்றிய இவர் வகுப்புவாதம், மதவாதத்துக்கு எதிராக செயல்பட்டவர். தொடர்ந்து பாஜகவுக்கு எதிராகவும், இந்துத்துவாவை எதிர்த்தும் பல்வேறு கட்டுரைகளை எழுதி வந்தார். கடந்த ஆண்டு, பாஜக தலைவர்களுக்கு எதிராக கட்டுரை எழுதியதற்காக அவதூறு வழக்கில் கவுரி லங்கேஷ் தண்டிக்கப்பட்டார். துணிச்சல் இதழியலாளரான இவர் மதவாதத்திற்கு எதிராக தொடர்ந்து எழுதி வந்துள்ளார். கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டதற்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. பெண் இதழியலாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்து உள்ளது. மதிப்பிற்குரிய இதழியலாளர் கவுரி லங்கேஷ் கொலைக்கு உலகம் முழுவதும் எழுந்து உள்ள கண்டத்திற்கு அமெரிக்க தூதரகம் உடன் நிற்கிறது. கவுரி லங்கேஷின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரிபவர்களுக்கு எங்களுடைய இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் என அமெரிக்க தூதரகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



