Show all

நடிகர் விஜய்யின், ஈழத்தில் இருக்கும் சொத்துக்களை, களவாடும் முயற்சியில்! சில சிங்கள முதலாளிகள்

ஈழத்தில் வாங்கி வைத்துள்ள நடிகர் விஜய்யின் சொத்துக்களுக்கு சிக்கல் ஏற்பட்டதால் விஜய் குடும்பம் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.
 
15,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ்த் திரையிலகில், முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். ஈழத்து பெண்ணான சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார் விஜய்.

சங்கீதாவின் தந்தை லண்டனில் மிகப்பெரிய தொழிலதிபர். விஜய் மனைவியின் சொந்த நாடான ஈழத்தில் பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை வாங்கி வைத்துள்ளார் விஜய்.

தற்போது சிங்களத்தை சார்ந்த சில முதலாளிகள் விஜய்யின் சொத்து என தெரிந்தும் அதனை களவாடத் திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

இதனால் விஜய் விரைவில் ஈழம் சென்று இந்த சிக்கலை நேரில் சரி செய்வார் என கூறப்பட்டு வருகிறது. ஈழத்தில் வாங்கி வைத்துள்ள சொத்துக்களுக்கு இப்படி ஒரு சிக்கல் ஏற்பட்டதால் விஜய் குடும்பம் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.