Show all

விளக்கேற்றுத் திருவிழா! திருவண்ணாமலையில் மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது

நேற்று தமிழகம் முழுவதும், மாலைப் பொழுதில், அனைத்து வீடுகளிலும் அகல்விளக்குகள் ஏற்றப்பட்டு, கார்த்திகை குளிர் மாதத்தில், அடுப்பு (பரணி) நாள்மீனில் கொண்டாடும் விளக்கேற்றுத் திருவிழா சிறப்பாக முன்னெடுக்கப் பட்டது.

15,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: முதல் எனப்படுவது இடமும் காலமும் என்றனர் நம் தமிழ்முன்னோர். அதையே தான் ‘முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே’ என்று தொல்காப்பியரும் தெரிவித்திருப்பார். 

இடம் அடிப்படையில் தமிழர்கள் ஓரை என்ற பகுப்பு முறையைப் பின்பற்றினார்கள். நாம் வாழும் புவி, ஞாயிறுகோளைச் சுற்றிவரும் பாதையை பனிரெண்டு பிரிவுகளாக பிரித்து அவற்றுக்கு பனிரெண்டு தமிழ் மாதங்களின் பெயர்களைச் சூட்டினார்கள். அந்த வகையான இடம் அடிப்படை கொண்ட  சித்திரை ஒன்று தமிழ்ப் புத்தாண்டு, ஆடி பதினெட்டு நீர்ப்பெருக்குத் திருவிழா, தை முதல்நாள் பொங்கல் திருவிழா ஆகிய இந்த விழாக்களை, நாட்களை யொட்டி முன்னெடுத்தார்கள். 

காலம் அடிப்படையில் தமிழர்கள் நாள்மீன் என்ற பகுப்பு முறையைப் பின்பற்றினார்கள். புவி சுற்றிவரும் பாதையில் காணப்படுகிற நாள்மீன் கூட்டங்களை அதற்கு அடையாளமாக பயன்படுத்தினார்கள். அதற்கு தமிழர் கண்ட நாள்மீன் கூட்டங்கள் 27 ஆகும்.  இடம் அடிப்படையில் நாட்களை யொட்டி மேற்கண்ட மூன்று விழாக்களை கொண்டாடிய தமிழர்கள்- காலம் அடிப்படையிலான நாள்மீனை யொட்டி கொணர்ந்த ஒரு விழாதான் கார்த்திகை குளிர் மாதத்தில், அடுப்பு (பரணி) நாள்மீனில் கொண்டாடும் விளக்கேற்றுத் திருவிழாவாகும்.  

அறிவூட்டம் மிக்க இந்தச் செய்திகள், பார்ப்பனியர் வருகைக்குப் பின் கட்டுக்கதைகளுக்கும், கற்பனைகளுக்கும் உள்ளாக்கப்பட்டு அந்த புனைத்திறன்கள் அடிப்படையிலேயே இன்று விளக்கேற்றுத் திருவிழா இன்றுவரை பரப்பிட முயலப்பட்டு வருகிறது. 

தமிழர்கள் தொடர்ந்து விளக்கேற்றுத் திருவிழா கொண்டாடி வருகிறார்கள். ஆனால், தமிழ்முன்னோர்களின் இந்த அறிவூட்டம் மிக்க செய்திகளை மீள்உருவாக்கம் செய்ய முனையாமலும், பார்ப்பனியர்கள் வலிந்து இணையம் வரை திணித்துவரும் அந்த கட்டுக்கதைகளுக்கும், கற்பனைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட அந்த புனைத்திறன்கள் அடிப்படையிலும் முனையாமலும், மரபு அடிப்படையாக தமிழர்கள் தொடர்ந்து விளக்கேற்றுத் திருவிழா கொண்டாடி வருகிறார்கள்.    

நேற்று தமிழகம் முழுவதும், மாலைப் பொழுதில், அனைத்து வீடுகளிலும் அகல்விளக்குகள் ஏற்றப்பட்டு, கார்த்திகை குளிர் மாதத்தில், அடுப்பு (பரணி) நாள்மீனில் கொண்டாடும் விளக்கேற்றுத் திருவிழா சிறப்பாக முன்னெடுக்கப் பட்டது.

தமிழகத்திலேயே கார்த்திகை குளிர் மாதத்தில், அடுப்பு (பரணி) நாள்மீனில் கொண்டாடும் விளக்கேற்றுத் திருவிழாவை மிகச் சிறப்பாக முன்னெடுக்கும்- திருவண்ணாமலை சிவன் கோவிலில், விளக்கேற்றுத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று காலையிலேயே தொடங்கியது. 

கோவிலினுள் இருந்து திருவண்ணாமலையை நோக்கி பார்த்தவாறே மாலை, 6.00 மணிக்கு கோவில் கொடி மரம் எதிரில் உள்ள அகண்ட விளக்கு ஏற்றப்பட்டு, 2,668 அடி உயர மலை உச்சியில் உள்ளவர்களுக்கு தெரியும்படி காட்டப்பட்டது. 

அதே நேரத்தில், மலை உச்சியில் பெருவிளக்கு ஏற்றப்பட்டது. அந்தப் பெருவிளக்கு ஒளியை 40 கி.மீ. தூரம் வரை காட்சி அளிக்கும் வகையாக, விளக்கேற்றுத் திருவிழா திருவண்ணாமலை சிவன் கோவிலில் மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. 

தமிழகத்தின் அனைத்துக் கோயில்களிலும், கார்த்திகை குளிர் மாதத்தில், அடுப்பு (பரணி) நாள்மீனில் கொண்டாடும் விளக்கேற்றுத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.