ஈராக்கில் குர்திஷ் இன மக்களுக்கான தனி நாடு அங்கீகாரம் கோரும் தேர்தல் நேற்று நடைபெற்றது. நேற்று காலை தொடங்கிய தேர்தல் மாலையில் நிறைவடைந்தது. தேர்தல் முடிவுகள் அடுத்த மூன்று நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. இந்தத் தேர்தல் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று குர்திஷ்தான் அரசின் துணைப் பிரதமர் க்யூபத் தலபானி தெரிவித்துள்ளார். நீண்டகால கோரிக்கையின் முதல் வெற்றிப்பயணத்தை தாங்கள் தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ள அவர், இந்த வாக்கெடுப்பை அண்டை நாடுகள் அச்சுறுத்தலாக பார்க்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். முன்னதாக குர்திஷ்தான் தேர்தலை அங்கீகரிக்க முடியாது என்று ஏற்கனவே ஈராக் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தனிநாடு கோரும் இந்த தேர்தலால் ஈராக்கின் பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



