Show all

இந்தியச் சமயக்கோட்பாடுகளுக்கு ஹிந்து எனப் பெயரிட்டவர்கள் இஸ்லாமியர்கள்: கமல்

நடிகர் கமல்ஹாசன் அண்மைக்காலமாக தமிழக அரசியல் குறித்து காரசார கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதன்மூலம் நடிகர் கமல் அரசியலுக்கு வருவது உறுதியாகியுள்ளது. அவ்வப்போது ஊழல் ஆட்சி, முதல்வர் பதவி விலக வேண்டும் என்றும் கமல் நேரடியாக தமிழக அரசை சாடி வருகிறார்.

தனியார் நிகழ்ச்சி ஒன்றிற்கு நடிகர் கமல் நேர்காணல் அளித்தபோது, தான் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்று கூறினார்.

அரசியலுக்கு வந்தப்பின் திரைப்படத்தில் நடிக்க மாட்டேன் என்றும் அவர் கூறினார். என் கட்சிக்கு மக்களே காசு தருவார்கள் என்றும் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

பன்முகத்தன்மை கொண்ட நாடு இந்தியா. ஹிந்து என்ற பெயரை இந்தியா மீது படையெடுத்து வந்த இஸ்லாமியர்கள்தான் சூட்டியிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஒரே இனம், ஒரே மொழி என்பதை தான் ஒருபோதும் ஆதரிக்கவே மாட்டேன் என்றும் இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு என்றும் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.