Show all

நாளை முதல் புதிய விதிமுறைகளை அமல்படுத்தும் ICC

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பல்வேறு புதிய விதிமுறைகளை நாளை முதல் அமல்படுத்த உள்ளது அது தொடர்பான விவரங்களை கீழே பார்க்கலாம்.

1. கிரிக்கெட் பேட்டின் முனையின் தடிமன் 40 மில்லி மீட்டருக்கு குறைவாக இருக்க வேண்டும்.
2. பேட்டின் ஒட்டுமொத்த தடிமன் 67 மில்லி மீட்டருக்கு குறைவாக இருக்க வேண்டும்.
3. பேட்டின் தடிமனை பரிசோதிக்க நடுவர்களுக்கு கருவி வழங்கப்படும்.
4. களத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் வீரர் நடுவரால் வெளியேற்றப்படுவார்.
5. டி 20 போட்டிகளில் டிஆர்எஸ் பயன்படுத்தப்படும்.
6. 80 ஓவர்களுக்குப் பிறகு கூடுதலாக டிஆர்எஸ் வாய்ப்புகள் வழங்கப்படாது. 
7. டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸூக்கு 2 டிஆர்எஸ் வாய்ப்புகள் மட்டுமே வழங்கப்படும்.
8. ஒரு முறை கிரிஸை தொட்டுவிட்டால் அதன் பிறகு பந்து ஸ்டெம்பில் படும்போது, பேட் கிரிஸில் படாமல் இருந்தாலும் அவுட் கிடையாது
9. கேட்ச் செய்யும் போது பீல்டரின் கால், பவுண்டரி எல்லைக்குள் இருக்க வேண்டும். வெளியே நின்று கேட்ச் செய்தால் அது பவுண்டரியாக கருதப்படும்.
10. விக்கெட் கீப்பர் அல்லது பீல்டரின் ஹெல்மெட்டில் பந்து பட்டு கேட்ச் பிடித்தாலும் ரன் அவுட் செய்தாலும் அவுட் ஆகும். 

தற்போது நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா தொடரில் இந்த விதிமுறைகள் பின்பற்றப்பட மாட்டாது. தென் ஆப்பிரிக்கா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான தொடரிலிருந்து  புதிய விதிமுறைகள் பின்பற்றப்படும். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.