அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள பன்னாட்டு நிதியத்தின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நிதி அசை;சர் அருண்ஜெட்லி அமெரிக்காவில் ஒரு வாரம் பயணம் மேற்கொள்கிறார். இன்று அவர் அமெரிக்கா சென்றடைகிறார். தனது அமெரிக்க வருகைக்கு முன்னதாக அவர் பெர்க்லி நகர இந்தியர்கள் மாநாட்டில் காணொளி உரையாடல் மூலம் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: தூய்மை இந்தியா இயக்கம், சரக்குசேவை வரி விதிப்பு, பண மதிப்பு நீக்க நடவடிக்கைகளுக்கு பலன் இல்லவேயில்லை என்று கூறப்படுவதை ஏற்கமாட்டேன். இந்த மூன்றிலும் நல்ல விளைவுகள் ஏற்பட்டு உள்ளன. குறிப்பாக பணமதிப்பு நீக்கமும், ஜி.எஸ்.டி.யும் எதிர்பார்த்த அளவிற்கு பொருளாதாரத்திற்கு பலனை தந்துள்ளன (யாருக்கு? அமித்சா மகனுக்கா? ). இதுவரை இல்லாத அளவிற்கு நாட்டின் வரி வருவாய் அதிகரித்து இருக்கிறது. இந்திய பொருளாதாரம் மீண்டும் தனது வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. (திரும்பும் தான்! சோதிடம் யார் கேட்டார்கள்? ) இந்த வளர்ச்சி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் விதத்தில் எழுச்சி காணும். ஏனென்றால் நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்களுக்கு மட்டுமின்றி, இளைய தலைமுறையினருக்கும் சேவை செய்யவேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது என்பதை நாங்கள் அறிவோம் (ஆனால் செய்யலீயே) பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் காஷ்மீரிலும், சத்தீஷ்காரிலும் பயங்கரவாத செயல்கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன. காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக நடந்த கல்வீச்சு சம்பவங்கள் நின்றுவிட்டன. அங்கு கல்வீச்சில் ஈடுபட 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேருக்கு பயங்கரவாத அமைப்புகள் நிதி உதவி செய்தன. ஆனால் கடந்த 8 முதல் 10 மாதங்களில் காஷ்மீரில் கல்வீச்சு சம்பவங்கள் ஏன் நிகழவில்லை? காரணம் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பது நின்றுபோனதுதான். தூய்மை இந்தியா திட்டத்தை பொறுத்தவரை தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பது முதல் முறையாக ஒரு இயக்கமாக கொண்டு வரப்பட்டு உள்ளது. அதிலும் எதிர்பார்த்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. (மக்களை கழிப்பிடம் கட்டி ஆயி போங்கள் என்கிற கருத்துப் பரப்புதல் மட்டுந்தான் தூய்மையா? நோய் நொடிகள் வராமல் பாதுகாப்பது எல்லாம் தூய்மை இல்லையா? இந்தியா முழுவதும் நோய்களால் அதிகரிக்கும் இறப்புவிகிதம் பற்றி கவலையில்லையா?) இவ்வாறு அவர் கூறினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



