Show all

கீழடி ஆய்வு இந்துத்துவாவின் பார்வைக்கு மாறான தகவல்களை வெளிப்படுத்துகிறது.

இன்று 23,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்,

நடுவண் அரசு கீழடி அகழ்வாராய்ச்சியைக் கைவிடும் நடவடிக்கை ஏற்கத்தக்கதல்ல. கீழடி அகழ்வாராய்ச்சி இந்துத்துவாவின் வரலாற்றுப் பார்வைக்கு நேர்மாறாக இருக்கின்றது. பழங்காலத்தில் சாதிகள் இல்லை என்பது கீழடி அகழ்வாராய்ச்சி மூலம் வெளிப்பட்டுள்ளது. இந்துத்துவாவின் பார்வைக்கு மாறான தகவல்கள் வெளியாவதன் காராணமாகவே பா.ஜ.க கீழடி அகழ்வாராய்ச்சியைக் கைவிடுகின்றது. அகழ்வாராய்ச்சியை மூடுவது என்ற மோசமான முடிவை மோடி அரசு கைவிட வேண்டும்.

மேலும், கோவை மாநகராட்சியில் பொதுமக்களைப் பாதிக்கும் வகையிலான வரி வசூலைக் கைவிட வேண்டும். அதேபோல, கோவையில் லாபகரமாக இயங்கும் நடுவண் அரசின் அச்சகம் தொடர்ந்து இயங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் டெங்குக் காய்ச்சல் காரணமாக 85 பேர் வரை உயிரிழந்து இருப்பதோடு, ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில அரசின் நடவடிக்கை போதுமானதாக இல்லை. உள்ளாட்சி அமைப்புகள் முறையாக இல்லாதது, டெங்கு பரவும் காரணங்களின் ஒன்று. டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேரளாவைப் போல தமிழகத்திலும் கோவில்களில் தாழ்த்தப்பட்டவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.