Show all

சீனாவின் ஷியாமென் நகரில் 9வது பிரிக்ஸ் மாநாடு 5 நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்

தென் ஆப்பிரிக்கா, சீனா, பிரேசில், ரஷியா, இந்தியா ஆகிய 5 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு ‘‘பிரிக்ஸ்’’ எனும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. பிரிக்ஸ் அமைப்பு நாடுகளின் தலைவர்கள் ஆண்டுக்கு ஒரு தடவை சந்தித்து பேசுவது வழக்கம். உலகளாவிய பொருளாதார மேம்பாட்டை மேற்கொள்ள பேசுவதற்கு இந்த மாநாடு.

கடந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டை கோவாவில் இந்தியா நடத்தியது. அப்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டார்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பிரிக்ஸ் மாநாடு சீனாவின் சியாமென் நகரில் இன்று தொடங்கியுள்ளது. இந்த மாநாடு நாளது 5(நாளை) வரை நடைபெற உள்ளது.

முன்னதாக பிரிக்ஸ் மாநாட்டை ஒட்டி ஷியாமென் நகரில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடைபெற்றது. மாநாட்டு வருகை புரிந்த ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், பிரேசில் அதிபர் மைக்கேல் தெமெர் உள்ளிட்ட தலைவர்களை அதிபர் ஜி ஜின்பிங் வரவேற்றார்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள சுற்றுலா ஆர்வலர் மோடியும் சென்றுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.