கமல்ஹாசன் விஜய் தொலைக்காட்சியில் தாம் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களுக்கு விடுத்த அழைப்பு: நாட்டிலும் புரட்சி துவங்கியிருப்பதாக நினைக்கிறேன். நீட் தேர்வு விவகாரத்தில் யார் காரணம்? என்பதெல்லாம் பேச நிறைய பேர் இருக்கிறார்கள.; நாம்; மக்கள், மாணவர்கள் நீட் விவகாரத்தில் ஒரு தீர்வை நோக்கிச் செல்ல வேண்டும். ஒரு புள்ள செத்துப் போச்சு; இனி ஒரு புள்ள செத்துக்கிடப்பதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. கை கோர்ப்போம். நமது இனத்துக்கு பல முறை துரோகங்கள் இழைக்கப்பட்டன. அப்போதெல்லாம் கை பிசைந்து கொண்டிருந்தோம். இனி அப்படியில்லாமல் கை கோர்ப்போம் கல்வியாளர்களுடன். நீட் விவகாரத்தில் தீர்வு என்னிடம் இல்லை. தீர்வை வைத்துக் கொண்டா சொல்லமாட்டேன் என்கிறேன். கற்றவர்களுடன் கை கோர்த்ததால் நான் உயர்ந்திருக்கிறேன். அதைத்தான் செய்ய வேண்டும். பெரியவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என மாணவர்கள் ஒதுங்க கூடாது. நாளைய பெரியவர்கள் நீங்கள்தாம். உங்களுக்கு அடுத்த தலைமுறைக்கு நீங்கள்தான் வழிகாட்ட வேண்டும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்வோம். உலகைத் தாங்கி பிடிக்க நான் அட்லஸ் அல்ல. ஆனால் உலகம் என்னை தாங்கிப் பிடிக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அப்படி தாங்கி பிடித்ததாலேயே நான் கலைஞனாக நிமிர்ந்து நிற்கிறோம். நல்ல குடிமகனாக நாம் தலைநிமிர நாம் ஒன்றுபட வேண்டும். கட்சி, சாதி, மத பேதங்களைக் கடந்து ஒன்றுபட வேண்டும். அப்படியானால் இது என்ன விடுதலைப் போராட்டமா?; ஆம் அதுதான். காற்று வாங்க விடுதலை கிடைத்ததே என்பதற்காக பெருமிதம் கொள்ளாமல் அதையும் கடந்து செல்ல வேண்டும். நமது கனவுகள் ஒன்றுதான். இவற்றை கலைப்பதற்கு சுயநலவாதிகள் இருந்து கொண்டுதாம் இருக்கிறார்கள். அவர்களுக்கு முடிந்த அளவு புத்தி சொல்வோம்! இல்லையெனில் நகர்த்தி வைப்போம்! இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



