Show all

அமெரிக்க தேர்தலில் தமிழர்கள் சாதனை

அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர் ராஜ கிருஷ்ணமூர்த்தி மற்றும் கமலா ஹரீஷ் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்தியாவின் டெல்லியில் பிறந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி (43), அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம், சிகாகோ நகரில் குடியரசுக் கட்சியின் பீட்டர் என்பவரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவரின் பெற்றோர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைத் தொடர்ந்து இந்திய வம்சாவளிப்பெண் கமலா ஹாரீஸ் (51) என்பவர் அமெரிக்க செனட் உறுப்பினராகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கமலாவின் தாயார், சென்னையைச் சேர்ந்தவர், கடந்த 1960ல் அமெரிக்கா சென்று குடியேறினார். கமலாவின் தந்தை ஜமைக்காவில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர். கலிபோர்னியா மாகாணத்தில் அட்டர்னி ஜெனரலாக உள்ள கமலா, ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர். முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் துணை குடியரசுதலைவர் ஜோ பிடென் ஆகியோரின் ஆதரவும் இவருக்கு உள்ளது என கூறப்படுகிறது. மேலும் ஜனநாயக கட்சி சார்பில், வாஷிங்டனின் சியாட்டில் பகுதியில் பிரமிளா ஜெயபால் என்பவர் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் சென்னையில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர் ஆவார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.