கச்சத்தீவு அருகே இராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்கள், பாட்டில்களை வீசி இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி உள்ளனர். 11,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: காங்கிரஸ் ஆட்சியின் போது சிங்கள பேரினவாத இலங்கைக்கு- தாரை வார்க்கப்பட்ட தமிழர் தீவான கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் மீது கற்கள், பாட்டில்களை வீசி இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி அடாவடியில் ஈடுபட்டு உள்ளனர். கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும் விரட்டியடிப்பதும் கைது செய்வதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. ஒன்றிய ஆட்சியில் காங்கிரஸ் இருந்தபோதும் சரி தற்போது பாஜக இருக்கிறபோதும் சரி தமிழக மீனவர்களுக்கு விடிவேயில்லையா என்ற கேள்வி தொடர்ந்த வண்ணமேயுள்ளது. இந்நிலையில் கச்சத்தீவு அருகே இராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்கள், பாட்டில்களை வீசி இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி உள்ளனர். இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் மீனவர்களின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மீனவர்கள் கரை திரும்பி உள்ளனர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி சாதனங்களையும் இலங்கை கடற்படை சேதப்படுத்தி உள்ளதாக மீனவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இலங்கை கடற்படை அட்டூழியத்தால் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் பெரும் இழப்புகளுடன் கரை திரும்பியுள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.