மனுநீதிக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போராட்டம் நடத்தியுள்ள நிலையில், பாஜக மனு நீதிக்கு ஆதரவாக கருத்து எதையும் இப்போது தெரிவிக்கவில்லை என்று குஷ்புவே தெரிவிக்கிறார். அப்படியானால் எதிர் போராட்டம் எதற்கு என்பதான காரணந்தான் புரியவில்லை. 11,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த சில நாட்களாக மனுஸ்மிருதி நூலைத் தடைசெய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறது. காரணமாக பெண்களை இழிவு படுத்தும் கருத்துக்களை கொண்டது மனுஸ்மிருதி நூல் என்கின்றது. மனுஸ்மிருதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கும் வகையான கருத்துக்கள் இடம் பெற்றிருக்கின்றன என்பதில் இருவேறு கருத்துக்கு இடம் இல்லை என்பதே உண்மை. ஆனால் திருமாவளவனுக்கு எதிராக காரணம் ஏதும் இல்லாமல் புதியதாக பாஜகவில் இணைந்த குஷ்புவை விளம்பரப் படுத்தும் காரணம் பற்றியோ என்னவோ, தமிழக பாஜகவினர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் போராட்டம் நடத்தச் சென்ற, பாரதிய ஜனதா கட்சியில் புதியதாக இணைந்துள்ள நடிகை குஷ்பு சென்னைக்கு அருகில் கைதுசெய்யப்பட்டார். அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.டி. ராகவனும் கைதானார். மனுஸ்மிருதியில் பெண்களைப் பற்றிக் கூறப்பட்டுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறிய கருத்துகளுக்கு பாஜகவினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அப்படியான எதிர்நிலை- பாஜகவினர் பெண்களுக்கு எதிரான மனுஸ்மிருதியை ஆதரிக்கிறார்கள் என்றல்லவா ஆகிறது என்று கூட புரிந்து கொள்ளாமல். காரணம் இல்லாத போராட்டத்திற்கு ஆயத்தமாகி தமிழகத்தில் இன்னும் தாழ்ந்து போக செயலாற்றி வருகின்றார்கள் தமிழக பாஜகவினர் என்றே உணர முடிகின்றது. மனுநீதிக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போராட்டம் நடத்தியுள்ள நிலையில், பாஜக மனு நீதிக்கு ஆதரவாக கருத்து எதையும் இப்போது தெரிவிக்கவில்லை என்று குஷ்புவே தெரிவிக்கிறார். சரி குஷ்பு அவர்களே! நீங்கள் இணைந்த கட்சியே ஆதரிக்காத மனுஸ்மிருதிக்கு ஆதரவாக நீங்கள் போராடவுமான தேவை என்ன வந்தது என்று கேட்டால்- யாரும் மனு நீதியைப் பற்றி பேசாத நிலையில் திடீரென்று திருமாவளவன் ஏன் நடைமுறையில் இல்லாத விசயங்களைப் பற்றி கிளப்பவேண்டும் என்றும் கேட்டுள்ளார் குஷ்பு. சிதம்பரத்தில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. இந்த நிலையில், அங்கு போராட்டம் நடத்துவதற்காக அண்மையில் பாஜகவில் இணைந்த குஷ்பு சென்னையிலிருந்து சிதம்பரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அவரை முட்டுக்காடு அருகே வழிமறித்து காவல்துறையினர் கைதுசெய்தனர். அதேபோல, போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றுகொண்டிருந்த பாஜகவின் மாநிலப் பொதுச்செயலாளர் கே.டி. ராகவனை ஆத்தூர் சுங்கச்சாவடியில் காவல்துறை கைதுசெய்துள்ளது. சிதம்பரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பா.ஜ.க மற்றும் விடுதலைச் சிறுத்தை கட்சியைச் சேர்ந்த பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



