Show all

தமிழர் பாரம்பரியத்தை சிறுமை படுத்திய தமிழகம்; பெருமை படுத்தும் சிங்கபூர்! உளவியல் சிகிச்சை பாசுக்கர் கைது, இளையராஜ இசை மருத்துவம்

19,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இசைஞானி என்று போற்றப்படும் இசை அமைப்பாளர் இளையராஜா 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்டார்.

அவரது இசைக்கு பெருமை சேர்க்கும் விதமாக இளையராஜாவின் இசையை மருத்துவத்துக்குப் பயன்படுத்தும் முயற்சியை சிங்கப்பூரில் உள்ள பிரபல மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை கையில் எடுத்திருக்கிறது.

அவருடைய ஆல்பங்கள், சில திரைப்படப் பாடல்கள் பற்றி விரிவாக ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கின்றது. சில இசைக்கோப்புகளை பிரத்யேகமாக இந்தத் தொகுப்புக்காக உருவாக்கி கொடுத்திருக்கிறார் இசைஞானி.

உளவியல் சிகிச்சை பாசுக்கரை கைது செய்து தமிழக பாடம் போடுதல் என்பதை அடிப்படையாகக் கொண்ட தமிழர் பாரம்பரிய உளவியல் சிகிச்சையை சிறுமை படுத்தியுள்ளது தமிழகம்!

அதே தமிழக பாரம்பரிய பாடம் போடுதல் என்பதை அடிப்படையாகக் கொண்ட உளவில் சிகிச்சைக்காக இசைஞானி இளையராஜாவின் பாடல்களை தெரிவு செய்து தமிழர் பாரம்பரியத்தை பெருமை படுத்துகிறது சிங்கப்பூர்!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,869.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.