20,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இரண்டு நாட்கள் பயணமாக வியாழக் கிழமை இந்தியா வந்த உருசிய அதிபர் விளாடிமிர் புடின், மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். தொடர்ந்து இருவரும், டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து நேற்று விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே தொடர்வண்டி, அணுசக்தி, விண்வெளி துறையில் ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதில், அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி, எஸ்-400 ஏவுகணை கொள்முதல் தொடர்பான ஒப்பந்தமும் இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் மேலும் 6 புதிய அணு உலைகள் அமைப்பதற்கான ஒப்பந்தத்திலும் இரு நாடுகள் கையெழுத்திட்டன. தொடர்ந்து மோடி மற்றும் விளாடிமிர் புடின் செய்தியாளர்களுகு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது, இருநாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் குறித்து இருவரும் விளக்கினர். இந்தியா வந்த உருசிய அதிபர் ஒரு கல்லில் மூன்று மாங்காய் அடித்துச் செல்கிறார். 1. எஸ்-400 ஏவுகணை கொள்முதல் தொடர்பான வணிகம். 2. ஆறு புதிய அணு உலைகள் அமைப்பதற்கான ஒப்பந்தம். 3. இந்தியாவிற்கு வாங்கிக் கொடுத்த அமெரிக்க பகை. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,932.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.