2020-ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கியதன் காரணமாக தலைமைஅமைச்சர் மோடி எந்த நாட்டிற்கும் பயணம் மேற்கொள்ளவில்லை. இதன் மூலம் 2020-ஆம் ஆண்டு மோடிக்கு வெளிநாடு பயணம் இல்லாத ஆண்டாக மாறியுள்ளது. 09,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியத் தலைமைஅமைச்சராக நரேந்திரமோடி ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பதவியேற்றார். 2-வது முறையாக தொடர்ந்து தலைமைஅமைச்சர் பதவி வகித்து வருகிறார். இதற்கிடையில், இந்தியத் தலைமைஅமைச்சராகப் பொறுப்பேற்றதில் இருந்து நரேந்திரமோடி பல்வேறு நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் பல வெளிநாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். தலைமைஅமைச்சர் அலுவலகத்தின் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி மோடி, இதுவரை 96 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்திற்காக 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவாகியுள்ளது. இந்நிலையில் 2020-ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கியதன் காரணமாக தலைமைஅமைச்சர் மோடி எந்த நாட்டிற்கும் பயணம் மேற்கொள்ளவில்லை. இதன் மூலம் 2020-ஆம் ஆண்டு மோடிக்கு வெளிநாடு பயணம் இல்லாத ஆண்டாக மாறியுள்ளது. இன்று வரை தலைமைஅமைச்சர் மோடி ஒரு பன்னாட்டுப் பயணத்தை கூட மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் மோடி பிரேசில் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் பின் அவர் எந்த ஒரு வெளிநாட்டிற்கும் பயணம் மேற்கொள்ளவில்லை. பத்தொன்பதாவது ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தலைமை அமைச்சர் மோடியின் கிர்கிஸ்தான் பயணத்திற்கு பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்த அந்த நாடு அனுமதி அளித்திருந்த போதும், ஈரான் மற்றும் ஓமன் வான் எல்லை வழியாக மோடி பயணம் மேற்கொண்டார். இது கடந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் தலைமைஅமைச்சர் மோடி கலந்து கொண்ட கதை. கொரோனா ஆதிக்கத்திற்கு முன்பு வரை எந்த உலக நாட்டுப் பயணம் என்றாலும், இந்தியா சார்பாக மோடிதான் கலந்து கொள்வது முந்தைய ஆறு ஆண்டுகால நடுவண் பாஜக ஆட்சியின் மரபாக இருந்து வந்தது. ஆனால் நாளது 18,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122 (03.09.2020) அன்று இரஷ்யாவில் நடக்கும் சாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள நடுவண் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக இரஷ்யா சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



