Show all

காஷ்மீர் பிரச்சனையில் உயர்ந்த பட்ச எரிச்சலில் பாகிஸ்தான்! தொடரும் பல்வேறு அதிரடிகள்; இந்தியாவுடன் உறவை முறிக்கிறது.

இந்தியாவின் மீது பகையை வளர்த்து பாகிஸ்தானில் அரசியல் செய்வதற்கு பாகிஸ்தான் அரசியல்வாதிகளுக்குக் கிடைத்த மிகப் பெரிய கருவியாக இருந்து வந்தது ஜம்மு-காஷ்மீர். ஜம்மு-காஷ்மீரை இந்தியாவிடம் இருந்து மீட்க (கைப்பற்ற அல்ல) வேண்டும் என்பதாகவே, பகை நெருப்பை மூட்டி வந்திருந்தார்கள் கடந்த ஏழுபது ஆண்டுகளாகவே பாகிஸ்தான் அரசியல்வாதிகள். பாஜக அதிரடியால், காஷ்மீர் பிரச்சனையில் உயர்ந்த பட்ச எரிச்சலில் பாகிஸ்தான்! தொடரும் பல்வேறு அதிரடிகள்; இந்தியாவுடன் உறவு முறிகிறது.

23,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாகிஸ்தான் அரசியல்வாதிகளுக்கு மட்டும் கருவியல்ல காஷ்மீர்; இந்தியாவில் பாஜகவிற்கும் காஷ்மீர்தான் அரசியல் செய்வதற்கான கருவி. இந்தியாவில் காங்கிரஸ் விடுதலை வாங்கிக் கொடுத்த கட்சி என்பதாகவே இராஜிவ் காந்தி காலம் முடிய பிழைப்பை ஓட்டியது. பாஜக இரண்டு கருவிகளை வைத்து இந்தியாவில் அரசியல் செய்;ய முடியும் என்று தொடர்ந்து, வரலாறு காணாத வெற்றியை ஈட்டியே வருகிறது. அந்த இரண்டு கருவிகள் ஒன்று ஹிந்துத்துவா. இரண்டு காஷ்மீர். 

இந்த நிலையில்தான் பாஜக நடுவண் அரசு காஷ்மீரை வைத்து மிகப் பெரிய அரசியல் செய்தது மட்டுமல்லாமல், இனி பாகிஸ்தான் அரசியல்வாதிகள் காஷ்மீரைக் கருவியாக வைத்து இந்தியாவின் மீதான பகையை வளர்த்து அரசியல் செய்ய முடியாது. இனி இந்தியாவின் மீதான பகை வளர்ப்பு அரசியலை நேரடியாகவே செய்யவேண்டியிருக்கும். அதைத்தான் முன்னெடுத்திருக்கிறது பாகிஸ்தான் ஆளும் அரசு.

ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு, அதற்கான சிறப்புப் தகுதியும் நீக்கப்பட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது. இதனால் அரசு ரீதியான நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இந்தியாவுடனான உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. வர்த்தக உறவையும் ரத்து செய்தது பாகிஸ்தான். அதன்படி முதற்கட்டமாக, இந்தியாவுடன் அனைத்து விதமான தூதரக உறவுகளையும் பாகிஸ்தான் முறித்துக் கொள்கிறது. எந்த விதமான அரசு தொடர்பான உறவுகளும் இனி இருக்காது. இரண்டு நாட்டு தூதராக அதிகாரிகளும் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இரண்டு நாட்டிற்கும் இடையில் இருந்த வர்த்தக உறவும் முடிவிற்கு வருகிறது. இரண்டு நாடுகளுக்கு இடையில் இனி எந்த விதமான ஏற்றுமதி, இறக்குமதியும் இருக்காது. வாகா எல்லை மூடப்படும். பேருந்து போக்குவரத்து கூட இருக்காது. இதற்கு முன் செய்யப்பட ஒப்பந்தங்கள், இதற்கு முன் கையெழுத்து இடப்பட்ட முதன்மை புரிந்துணர்வுகள் எல்லாம் இனி பரிசீலிக்கப்படும். இதை தற்போது பாகிஸ்தான் ரத்து செய்யவில்லை. ஆனால் இது தொடர்பான அனைத்து விசயங்களை பாகிஸ்தான் ஆய்வு செய்து பின் முடிவு செய்யும். 

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நடந்த அதிரடி மாற்றங்கள் குறித்து ஐநாவில் முறையிட உள்ளதாக பாகிஸ்தான் முடிவு எடுத்துள்ளது. ஐநாவில் மட்டுமில்லாமல் ஐநா பாதுகாப்பு குழுவிலும் முறையிட போவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. ஐநா பாதுகாப்பு குழுவில் தற்போது சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டிஷ், அமெரிக்கா ஆகிய நாடுகள் இருக்கின்றன. இவர்களிடம் பாகிஸ்தான் தரப்பில் புகார் அளிக்கப்பட உள்ளது. இதையடுத்து இந்திய விடுதலை நாளை கருப்பு நாளாக அனுசரிக்க போவதாக பாகிஸ்தான் அறிவித்து உள்ளது. இந்திய விடுதலை நாளுக்கு முதல்நாள் பாகிஸ்தான் விடுதலைநாள் கொண்டாடப்படுகிறது. இதை காஷ்மீர் போராளிகளுக்கு மரியாதை செலுத்தவும் பயன்படுத்த போவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. 

பாஜக நடுவண் அரசும் இனி காஷ்மீரை தொடர்ந்து அரசியல் செய்வதற்கு பயன்படுத்த முடியாது. மாறாக மோடி, அமித்சாவின் கார்ப்பரேட் நண்பர்கள் காஷ்மீரில் களம் இறங்கி பாஜகவிற்கு கெட்ட பெயரை சம்பாதித்துக் கொடுப்பார்கள். இனி பாஜக நடுவண் அரசும் நேரடியாக பாகிஸ்தானுடன் மோதியே தங்கள் தேச பக்தியை நிலை நாட்ட வேண்டியிருக்கும்; இராணுவ வீரர்களுடன் புகைப்படம் எடுத்து பகிர்ந்தெல்;லாம் குப்பைக் கொட்ட முடியாது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,238.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.