Show all

விரைவில், ‘களத்தில் சந்திப்போம்’! தமிழர் விளையாட்டு கபடியைக் கொண்டாடும் படங்கள் வரிசையில்.

அண்மைக் காலமாக தமிழர் விளையாட்டு கபடியைக் கொண்டாடும் வகையாக, திரைப்படங்கள் தொடர்ந்து உருவாக்கப் பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இடம் பெறும் படம் களத்தில் சந்திப்போம்!

22,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அண்மைக் காலமாக தமிழர் விளையாட்டு கபடியைக் கொண்டாடும் வகையாக, திரைப்படங்கள் தொடர்ந்து உருவாக்கப் பட்டு வருகின்றன.

விக்ராந்த் நடிப்பில் ‘வெண்ணிலா கபடிக்குழு 2’ அண்மையில்  வெளியான நிலையில், சசிகுமார் நடிப்பில் கென்னடி கிளப், அதர்வா நடிப்பில் குருதி ஆட்டம் ஆகிய படங்கள் கபடியை மையமாகக் கொண்டு உருவாகிவருகின்றன.

இந்த வரிசையில் தற்போது இணைந்துள்ள படம் அருள்நிதி, ஜீவா இணைந்து நடிக்கும் ‘களத்தில் சந்திப்போம்’. ராஜசேகர் இயக்கும் இந்தப் படத்தின் முதல் பார்வை விளம்பர ஒட்டியை தனுஷ் வெளியிட்டு படக்குழுவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். பிரியா பவானி சங்கர், மஞ்சிமா மோகன் என இரு கதைத்தலைவிகள் இணைந்துள்ளனர்.

நட்பை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் ஜீவா, அருள்நிதி இருவரும் கபடி வீரர்கள். சிறுஅகவை முதலே நண்பர்கள். இருப்பினும் இருவரும் வௌ;வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்கள். காரைக்குடி பகுதியின் பின்னணியில் கதை நடைபெறுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,237.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.