Show all

நம்ம தலைமை அமைச்சருக்குதான் ஊர் சுற்றுவதிலே அலாதி விருப்பம் என்று பார்த்தால், நம்ம மக்களுக்குமா! ஓமன் நாட்டுப் புள்ளிவிவரம்

14,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஓமன் நாட்டில் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் உலக நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பதாக அந்நாட்டின் சுற்றுலாத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஓமன் நாட்டுக்குச் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டவர்கள் தொடர்பான புள்ளி விவரங்களை ஓமன் நாட்டின் தேசிய புள்ளியியல் மற்றும் தகவல் மையம் வெளியிட்டுள்ளது. 

அதன்படி, முடிந்த ஆண்டில் உலகம் முழுவதிலும் இருந்து மொத்தம் 14,84,063 பேர் ஓமன் நாட்டுக்குச் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர். அதில் 3,57,147 பேர் இந்தியர்கள். 

மேலும் முடிந்த ஆண்டில் இந்தியாவிலிருந்து ஓமன் நாட்டுக்குச் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை 12.37 விழுக்காடு அதிகரித்தும் உள்ளது. 

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இந்தியாவிலிருந்து ஓமன் நாட்டுக்குச் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கை 39.4 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. அடுத்து வரும் இருபது ஆண்டுக்குள் 11.7 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் சர்வதேச நாடுகளிலிருந்தும் உள்நாட்டிலிருந்தும் ஓமன் நாட்டில் சுற்றுலாப் பயணம் மேற்கொள்வார்கள் எனவும், சுற்றுலாத் துறையில் மேற்கூறிய காலகட்டத்தில் 20 பில்லியன் ரியால் அளவிலான முதலீடுகள் குவியும் எனவும் அந்நாட்டின் சுற்றுலா அமைச்சகம் எதிர்பார்க்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,075.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.