14,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ் திரையுலகில் உயரத்தை தொட்ட நடிகர் தனுஷ், தனது திருமண வாழ்க்கையிலும் உயரத்தைத் தொடும் முயற்சியாக ஐஸ்வர்யாவை மணந்து அவரை விட உயர நடிகர் ரஜினியின் வீட்டு மாப்பிள்ளை ஆனார். தமிழ் திரைப்படத்தை தாண்டி வடக்கு, மேற்கு என்று அந்தத் திரையுலகங்களிலும் நுழைந்து பெருஞ்சுற்று அடித்துவிட்டார். நடிப்பையும் தாண்டி மேற்கத்திய பாடகராகவும், கவிஞராகவும் தனது திறமையை நிரூபித்துள்ளார் நடிகர் தனுஷ். தனுஷ், ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இணையருக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் பிறந்தனர். இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா தனுஷ் அண்மையில் புதிதாக இன்ஸ்டகிராம் கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளார். அதனை தனது கீச்சுப் பக்கத்தில் பகிர்ந்த தனுஷ், 'என் மனைவி இன்ஸ்டாகிராமில் வந்துட்டாங்க இனிமேல் உங்களுக்கு மகிழ்ச்சிதான்' என்று கீச்சுப் பதிவிட்டுள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,075.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.