அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது, அந்நாட்டு பேராளர்கள் அவையில் கொண்டு வரப்பட்ட கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 04,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கண்டன தீர்மானம் கொண்டு வந்தது. சொந்த அரசியல் ஆதாயத்துக்காக அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய புகாரில் டிரம்ப்புக்கு எதிராக இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பாராளுமன்ற நடவடிக்கைகளை தடுத்தார் என்ற என்ற டிரம்புக்கு எதிரான 2வது தீர்மானமும் நிறைவேறியது. பேராளர்கள் அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செனட் அவையில் விவாதத்திற்கு அனுப்பப்படும். விசாரணைக்கு பின் செனட் அவையில் வாக்கெடுப்பு நடக்கும் என்பதால் டிரம்ப் பதவிக்கு உடனடியாக சிக்கல் இல்லை என்று தெரியவருகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,371.
இந்த தீர்மானத்தின் மீது பாராளுமன்றத்தில் 14 மணி நேரம் விவாதம் நடந்தது. அமெரிக்க பேராளர்கள் அவையில் அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கக் கோரும் முதல் தீர்மானம் நிறைவேறியது. டிரம்ப்பை பதவி நீக்கக்கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக 230க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வாக்களித்தனர். 194 உறுப்பினர்கள் மட்டும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



