Show all

பொங்கல் பரிசு வேண்டுமா- தேர்தல் வேண்டுமா! உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களுக்குப் பொங்கல் பரிசு இல்லை

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் அனுமதிக்கவில்லை.

04,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கவில்லை.

தமிழகத்தில் ஊரக அமைப்புகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வரும் மார்கழி12 (திசம்பர்27) மற்றும் மார்கழி15 (திசம்பர்30) என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு பதிகை முடிவடைந்து, இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.

இந்நிலையில், பொங்கல் பரிசு வழங்க தடை விதிக்கக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் தொடர்ந்த வழக்கு உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கவில்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

‘ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பொங்கல் பரிசு வழங்க அனுமதி அளிக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளோம். இதற்கு தேர்தல் ஆணையம் இன்னும் பதில் அளிக்கவில்லை.’ என தமிழக அரசு கூறியுள்ளது. தமிழக அரசு விளக்கம் அளித்ததையடுத்து, இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,371.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.