Show all

பக்கவிளைவுகளை ஆராய்கிறது இஸ்ரேல்! உலகின் அதிக விழுக்காட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்திய பெருமைக்குரிய நாடு

உலகின் அதிக விழுக்காட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்திய பெருமைக்குரிய நாடான இஸ்ரேல் தற்போது அதில் மக்களுக்கு எதாவது பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதா என்கிற ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது. பாதிப்பு மிக மிகக் குறைவாக அமையுமேயானால், கொரோனாவைத் தடுப்பூசி நிருவாகத்தில் வெற்றிகொண்ட நாடாக இஸ்ரேல் உலகினரால் கொண்டாடப்படும்.

14,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: பைசர் பயோ என்டெக் நிறுவனங்கள் தயாரித்த கோவிட்19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட சிலருக்கு இதய வீக்கம் ஏற்பட்டது குறித்து ஆராய்ந்து வருவதாக இஸ்ரேலின் நலங்குத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே சமயம், எதிர்பார்த்ததைவிட அதிகமான விழுக்காட்டில் மக்களிடம் இதய வீக்கம் அடையாளம் காணப்படவில்லை என்று பைசர் கூறியது.

தடுப்பூசி போட்ட சுமார் 50 இலட்சம் பேர்களில் பேரில், இதயவீக்கம் என்ற அந்த மருத்துவ நிலை 10க்கும் மேற்பட்டோரிடம் ஏற்பட்டதாகத் தொடக்கக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக இஸ்ரேலின் கிருமித்தொற்று முறியடிப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் குறிப்பிட்டார். குறிப்பாக, 2வது முறை தடுப்பூசி போட்ட பின், அது ஏற்படுவதாக அவர் சொன்னார்.

அதற்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இருக்கிறதா, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வழக்கத்துக்கு மாறாக அதிகமா ஆகியவை பற்றி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று அவர் விவரித்தார். அது குறித்து அந்நாட்டின் நலங்குத்துறை அமைச்சகம் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.