Show all

காலவரையறை இன்றி திரையரங்குகள் மூடல்! கொரோனா பாதிப்பு எதிரொலி

கொரோனா பாதிப்பால் இன்று முதல் திரையரங்குகள் மூடல் காரணமாக, வெளியீட்டுக்கு அணியமாக இருந்த பல புதிய படங்கள் எண்ணிமத் திரையோடு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளன. 

13,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருப்பதற்காக எண்ணிமத் திரையிலேயே புதுப்படங்களை வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவின் வேகம் பலமடங்கு அதிகரித்துள்ளதால் திரையரங்குகளை மூட தமிழகத்தின் பொறுப்புஅரசு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தில் இன்று முதல் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டன. மறு உத்தரவு வரும் வரை திரையரங்குகளை திறக்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் வெளியீட்டுக்கு அணியமாக உள்ள புதிய படங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக புதிய படங்கள் எண்ணிமத்திரையில் வெளியாக அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருப்பதற்காக எண்ணிமத் திரையிலேயே புதுப்படங்களை வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நயன்தாரா நடித்துள்ள ‘நெற்றிக்கண்’ படத்தை எண்ணிமத்திரையில் வெளியிட கலந்துரையாடல் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘துக்ளக் தர்பார்’, திரிசா நடித்துள்ள ‘ராங்கி’ படங்களையும் எண்ணிமத்திரையில் வெளியிட கலந்துரையாடல் நடந்து வருகின்றன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.