ஐ.நா. பொதுஅவையின் 72வது ஆண்டு கூட்டம் அதன் தலைமையகம் அமைந்துள்ள நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இதில் பங்கேற்று இன்று பேசியதாவது: உலகம் முழுவதும் தீவிரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. பாகிஸ்தான், தீவிரவாதத்திற்கு நிதி உதவி அளித்து வருகிறது. பருவநிலை மாற்றம் மிகப்பெரிய சவலாக உள்ளது. வறுமையை ஒழிக்க இந்தியா போராடி வருகிறது. ஆனால் பாகிஸ்தான், இந்தியாவுடன் போராடி வருகிறது. நாங்கள் ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ், இஸ்ரோ, பொறியாளர்கள், மருத்துவர்களை உருவாக்கி வருகிறோம். ஆனால் பாகிஸ்தான், லஷ்கர் இ-தொய்பா, ஜெய்ஷ்இமுகமது, தீவிரவாத முகாம்கள் மற்றும் ஜிகாதிகளை உருவாக்குகிறார்கள். இவ்வாறு சுஷ்மா சுவராஜ் பேசினார். சுஷ்மாவின் பேச்சுக்கு மோடி கீச்சுவில் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



