Show all

34காசுகளை காசோலை மூலம் அனுப்பிய செல்பேசி நிறுவனம்

கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர் நாளங்காடியில் கடை வைத்து நடத்தி வருகிறார். வோடபோன் செல்பேசியில் வைப்புத்தொகை செலுத்தி, கட்டணம் பின்னர் செலுத்தும் வசதி வைத்திருந்தார். அதில் கட்டணத்தொகை கூடுதலாக வந்ததால் கட்டணம் செலுத்திப் பேசும் சேவைக்கு மாறினார்.

அதன் பிறகு தனது கணக்கில் உள்ள பாக்கித் தொகையை அனுப்புமாறு செல்பேசி நிறுவனத்துக்கு தகவல் அனுப்பியிருந்தார்.

இதனையடுத்து 34 காசுக்கு காசோலையாக ஆக்சிஸ் வங்கி மூலம் பாலசுப்பிரமணி வீட்டுக்கு ஒரு அஞ்சல் வந்தது. அதைப்பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பாலசுப்பிரமணி இது குறித்து செல்பேசி நிறுவனத்திடம் போய் கேட்ட போது உங்கள் கணக்கில் 34 காசு மட்டுமே பாக்கி இருந்ததாகவும் அதனால்தான் அதனை காசோலையாக அனுப்பி வைத்ததாகவு அவர்கள் கூறினர்.

இதனை வங்கியில் போட்டு எடுத்தாலே ரூ.150 செலவாகும். இது கூட தெரியாமல் எதற்காக காசோலையை வீணடித்தீர்கள்? என கூறியவாறு பாலசுப்பிரமணி வேதனையுடன் வீடு திரும்பினார்.

கட்டணம் பின்னர் செலுத்தும் வசதி பெறும் போது எல்லா செல்பேசி நிறுவனங்களிலுமே தரவுகளுக்கான கட்டணம்-

கட்டணம் செலுத்திப் பயன்படுத்தும் சேவையைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக வசூலித்து விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் வழக்கு தொடர்ந்து ஆதாரத்தோடு நிரூபிக்கும் போதுதான் உண்மை புலப்படும்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.