10,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாகிஸ்தானின் புதிய தலைமை அமைச்சராக உலகின் முதல் கிரிக்கெட் வீரராக இம்ரான் கான் பதவியேற்றால், பாகிஸ்தான் இந்தியா உறவில் பெரிய சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பேசப்பட்டு வருகிறது. அவரது இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடு, ஆசிய கண்டத்தில் சில புதிய பிரச்சனைகளை உண்டாக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. பாகிஸ்தானின் புதிய தலைமைஅமைச்சர் இம்ரான் கான் தானா என்பது முடிவாவதற்கு இன்று மாலை வரை காத்திருக்க வேண்டும். பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து, தற்போது வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டு இருக்கிறது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 272 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதில் தனிப்பெரும்பான்மை பெற 137 பேர் தேவை. தற்போது இம்ரான் கானின் கட்சி 113 இடங்களுடன் முன்னிலை வகிக்கிறது. அந்தக் கட்சி எப்படியும் பெரும்பான்மை பெற்றுவிடும் என்றே கூறப்படுகிறது. பாகிஸ்தானில் மதத்தை பேசி ஆட்சிக்கு வந்தவர்களுக்கு மத்தியில் இவர் அதிகமாக, ஊழலை பேசி ஆட்சியை பிடிக்க இருக்கிறார் என்று கூறலாம். புட்டோவின் ஆட்சி குறித்தும், கடந்த நவாஸ் ஷெரீப்பின் ஆட்சி குறித்தும், அப்பாஸியின் ஆட்சி குறித்தும் மாறி மாறி ஊழல் குற்றச்சாட்டு வைத்தார். உலகப் பொருளாதாரம் குறித்து பேசினார். இவரது, பொருளாதார அணுகுமுறை, கண்டிப்பாக, ஆசிய கண்டத்தில் இந்தியாவிற்கு சில பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அந்த பாதிப்புகள் இனிப்பானதாக இருக்காது என்றும் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட வெளிப்படையாக இந்தியாவிற்கு எதிராக சில இடங்களில் அவர் பேசி இருக்கிறார். நவாஸ் ஷெரீப்பின் இந்தியாவுடனான நட்பு போக்கை வெளிப்படையாக அவர் சாடி இருக்கிறார். அதேபோல் இந்திய ராணுவத்தின் அத்து மீறலை கருத்;துப்பரப்புதலில் எந்த அச்சமும் இன்றி பேசி இருக்கிறார். பாகிஸ்தான் அரசியலில் நல்ல தீவிரவாதம் கெட்ட தீவிரவாதம் என்ற சொற்றொடர்களை உருவாக்கியவர் இம்ரான்கான். அவர் பாகிஸ்தானில் இருக்கும், பாகிஸ்தான் மக்களுக்கு தீங்கு விளைவிக்காத ஒரு சில தீவிரவாத குழுக்களை ஆதரிக்கிறார் என்று புகார் இருக்கிறது. இந்தியா பாகிஸ்தான் உறவை பாதிக்க போவது இவரின் மோடிக்கு எதிரான நிலைப்பாடுதான். மோடி குறித்து இவர் வெளிப்படையாக சில இடங்களில் பேசி இருக்கிறார். பல இடங்களில் மோடி நவாஸ் ஷெரிப் நட்பு குறித்து கோபமாக பேசி இருக்கிறார். இந்தியாவில் இஸ்லாமியர்களின் நிலை குறித்து அவர் பட்டவர்த்தனமான பேசி இருக்கிறார். இதனால் அவர் பதவியேற்பு பாஜகவிற்கு பெரிய தலைவலியாக இருக்கும். இந்தியாவில் மோடி அப்புறப் படுத்தப் பட்டு புதிய ஆட்சி நடக்குமானால், இம்ரான்கான் இந்தியாவிற்கு பல நட்புறவு பாலங்களை உருவாக்குவார். அவருடைய தாரக மந்திரம் பாகிஸ்தானுக்கான நல்ல ஆட்சி. அதற்கு இந்தியாவால் சிக்கல் இல்;லாத போது இந்தியாவிற்கும் அவரால் சிக்கல் இல்லை. இந்தியாவில் மோடியும் பாகிஸ்தானில் இம்ரான்கானும், என்றால் எலியும் பூனை விளையாட்டுக்கு பஞ்சம் இருக்காதாம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,860
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



